தலித் பெண்கல்விக்கு வித்திட்ட வீரம்மாள் – காலச்சுவடு கட்டுரை
தலித் உரிமை , தலித் தலை நிமிர்வு , கல்வி திறன்களில் பிறருக்கு சவால் விடும் தலித் எழுச்சி என்றெல்லாம் ஒரு கனவு அளவில் கூட இப்போது கிடையாது. தலித் அரசியல் என்று ஒன்று மட்டுமே உண்டு. அரசியல் தலித் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பொது வரும் தடைகளை எதிர்த்து என்றால் அது வரவேற்புக்குரியதாக இருக்கும். இல்லை. அரசியல் மட்டுமே போதும் என்றால் இன்னும் பல காலம் தலித் நிலையில் மாற்றம் தேவையில்லை என்று பொருளாகும். அதுவே இன்று நடக்கிறது.
அரசியலில் ஈடுபடாமல் தனது பெயரை முக்கியப்படுத்தாமல் ஆலமரம் போல ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கியவர் வீரம்மாள். திருச்சியைச் சேர்ந்த எனக்கும் அவர் பற்றி எதுவுமே தெரியாதது அதனால் தான். 60 -70 வருடம் முன் பெண் அதுவும் தலித் எந்த அளவு பின்தள்ளப் பட்டிருப்பார் என்பது எளிதில் நாம் யூகிக்கக் கூடியது. அவர் தலித் சமூகம் நீண்ட காலம் பயன் பெறும் கனவைச் சுமந்தார். அயராது ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்தார். தலித் அல்லாத வறியோரும் பயன் பெற உதவினார்.
தலித் மற்றும் வறியோர்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் எந்த திசையில் நம் சிந்தனை இருக்க வேண்டும் என்பதற்கு அவர் பணி முன்னுதாரணம். ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரைக்கான இணைப்பு —- இது.
(image courtesy:kalachuvadu.com)