பிற உயிரினங்களை அழிப்பது தற்கொலை – தினமணி தலையங்கம்
யானைகள் தொடங்கி கீரி , உடும்பு, ஆமை என எல்லா வகை உயிரினங்கள் , பறவைகள் இவற்றை அழிப்பது நமக்கு அன்றாட நடவடிக்கை. யானையோ அல்லது சின்னஞ்சிறு குருவியோ இவை யாவும் செடி கொடிகள், மரங்கள் இவை இயல்பாய் முளை விட்டு விருட்சமாகி பசுமை தழைக்க உதவுபவை. அவை நிறைய எண்ணிக்கையில் இருந்தால் பசுமை தானே தழைக்கும். ஆனால் நாம் அவற்றின் உறைவிடம் எதுவோ அதையே அழிக்கிறோம். காடுகளிலும் வறட்சி உண்டு. அப்போது அவற்றிக்கு குடிநீர் மற்றும் உணவு தர நாம் முன்வருவதில்லை. ‘நாம் இந்த உலகை முன்னோரிடமிருந்து சொத்தாகப் பெறவில்லை. நம் குழந்தைகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறோம்’ என்னும் பொன்மொழி ஆழ்ந்த பொருளுள்ளது. தினமணியின் இந்தத் தலையங்கம் அதை மீண்டும் நினைவூட்டும். அதற்கான இணைப்பு ——- இது.
(image courtesy: youtube)