புஞ்சைப் பயிர்கள் – நீர்ச்சிக்கனம், ஆரோக்கியம் மற்றும் வருவாய்
தினமணியில் ஆர். எஸ். நாராயணன் என்னும் இயற்கை விவசாய நிபுணர் ‘நீர்ச்சிக்கன உணவு உற்பத்தி ‘ என்னும் கட்டுரையில் இவ்வாறு பதிவு செய்கிறார்:
—————-
நீர்த்தேவை அதிகமுள்ள உணவுப் பயிர்களை முறையே நெல், கரும்பு, கோதுமை, மக்காச்சோளம் என்று வகைப்படுத்த வேண்டும். நீர்ச்சிக்கனப் பயிர்களாக சின்னச்சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, புல்கோதுமை போன்ற சிறுதானியங்கள், கொண்டக்கடலை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, மசூர், கொள்ளு, காராமணி, மொச்சை போன்ற பருப்பு வகைகள், நிலக்கடலை எள், கடுகு, சூரியகாந்தி, சோயா குசும் (SAFFLOWER) போன்ற எண்ணெய்வித்துப்பயிர்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
—————–
மருத்துவர் மற்றும் சரிவிகித உணவு நிபுணர்கள் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, புல்கோதுமை ஆகிய உணவுகளில் நார்ச்சத்தும் ஊட்டச் சத்தும் மிகுந்திருப்பதைக் குறிப்பிடுகிறார்கள். அரிசி, கோதுமை இவற்றில் எனப்படும் மாவுச் சத்து அதிகம் . எடை அதிகரிப்பது மாவுச்சத்து உணவை நாம் அதிகம் உண்பதாலேயே.
நீர்ச்சிக்கனம் தரும் புஞ்சைப் பயிர்கள் உடலுக்கும் உகந்தவை. எண்ணெய் வித்துக்கள் வணிக ரீதியாகவும் லாபமளிப்பவை.
விவசாயிகள் தமது பயிர்ச் சுழற்சியில் மாற்றம் தர வேண்டும். பொது மக்கள் தமது உணவுப் பழக்கத்தில் புதிய அணுகு முறை கொண்டு வர வேண்டும். வானம் பொய்த்தாலும் மகசூல் செய்யும் வாய்ப்பைப் பயன் படுத்த வேண்டும்.
தினமணி கட்டுரைக்கான இணைப்பு ————–இது.
(image courtesy: cyclix.com)