வர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம்


வர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம்

வர்தா புயலில் மக்கள் இன்னலுற்றது மட்டுமே கவனம் பெறுகிறது. ஆயிரக்கணக்கில் அழிந்த மரங்கள் 30,40 ஆண்டுகள் பழமையானவை. மரம் வளர்ப்பது என்பது அருகி வருகிற ஒன்று. சென்னை போன்ற பெரு நகரில் மரம் வளர நிலமும் இல்லை. மரத்தை வளர்ப்போரும் இல்லை. உலக வெப்பமயமாதல், காற்று மாசு, மழை மறைவு இவை பசுங்காடுகளால் மட்டுமே கட்டுப் படுத்தப் பட முடியும். நாம் இழந்த மரங்களுக்கு மாற்றாக நிறையவே நட வேண்டும். அது ஒன்றே வரும் தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகவும் மதிப்பான சொத்தாக இருக்கும்.
தமிழ் ஹிந்து நாளிதழ் ‘விஷ்வா விஸ்வநாத்’ பதிவைப் பகிர்ந்திருக்கிறது. அவர் மரங்களின் பயனை அருமையாக விளக்குகிறார். அது கீழே:

——————————-

விஷ்வா விஸ்வநாத்:

ஒரு சராசரி மனிதர் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார்; ஒரு நாளைக்கு 11 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார், சுவாசம் செய்யப்பட்டதில் 15 % ஆக்சிஜனை அவர் வெளியேற்றுகிறார். ஆக, ஒரு நாளைக்கு 550 லிட்டர் சுத்தமான ஆக்சிஜனை ஒருவர் சுவாசிக்கிறார். இன்றைய சந்தை நிலவரப்படி 2 .75 லிட்டர் எடை கொண்ட ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் விலை ரூ.6,500. அந்த வகையில் கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம். சென்னை மாநகரம், சுற்றுவட்டாரங்களில் மட்டும் சுமார் ஒரு கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பையும் கணக்கிட்டால் எத்தனை கோடி மதிப்பு என்று கணக்கிட்டுக்கொள்ளலாம். அத்தனையையும் இலவசமாக வழங்குகின்றன நம்மைச் சுற்றி வாழும் மரங்கள். இத்தனை கோடி மதிப்புள்ள ஆக்சிஜனை அளிக்கும், எத்தனை மரங்களை வர்தா புயலில் இழந்துவிட்டோம்? எனவே, மரம் நடும் பணிகளை உடனடியாகத் தொடங்குதல் அவசியம்.

——————————-


 (image courtesy: Dinamalar.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s