வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது
கல்யாண்ஜி கவிதைகள் அல்லது வண்ணதாசன் கதைகள் என ஆளுமை அடிப்படையில் நான் வாசித்து உள்வாங்கியது இல்லை. படைப்பாளிகள் எந்த அளவு தாம் எடுத்துக்கொண்ட வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே புதுமைப்பித்தனின் காலத்துக்குப் பிறகு நமது அளவுகோலை இருக்கிறது. ஒரு படைப்பு கவிதை அல்லது கதை என வடிவம் பெரும் போது அந்த வடிவத்தில் வெகு தூரம் வந்து விட்ட படைப்பாளிகளின் தடத்தில் அடுத்த அடி எடுத்து வைக்கும் முயற்சி முனைப்பு அகந்தை தென்படுவதே நவீன இலக்கியத்தின் ஈர்ப்பு.
நவீன இலக்கியம் அல்லது சமகால இலக்கியம் நம் கவனத்தில் இந்த முன்செல்லும் எதிர்பார்ப்புடனே தான் ஒவ்வொரு படைப்பு வழி வாசிக்கப் படுகிறது.
அவரது படைப்புக்களில் இந்த முன்செல்லலை நான் காணவில்லை.
அவரது ஒரு சிறுகதையை வாசிப்போம். ‘அணில் நிறம் அல்லது நிறங்கள் ‘ சிறுகதைக்கு இணைப்பு —- இது.
ஒரு கரு அல்லது கதாபாத்திரம் என்று நின்று விடும் கட்டாயம் படைப்பாளிக்கு இல்லை. மனித வாழ்க்கையின் ஒரு சாளரம் திறக்கும் பணியே அது. ஒரு படைப்பு வழி அந்த சாளரம் பெரிய தரிசனம் தர முடியும். பெண் குழநதைகள் அல்லது ஏழை பெண்கள் மையமான கதையில் சாத்தியம் அதிகம். அவர்கள் தமது கட்டாயங்களை மீறி தனித்து நிற்கும் புள்ளியில் தலைமுறைகள் அரைகுறையாய் கொணர்ந்த சிந்தனை மாற்றம், கொண்டு வரத் தவறிய சுதந்திர சிந்தனை இவையும் விரியும். இந்த சிறுகதையில் அதற்கு வாய்ப்பு இருந்தது. அவர் அந்த திசையில் படைப்பை எடுக்கவில்லை.
அவருக்கு என் வாழ்த்துக்கள்.