இங்கிதம் கிலோ என்ன விலை ? -2
பொது இடங்களில் நாம் இங்கிதம் குறைவை அதிகம் கவனிக்கக் காரணம் அது பலரை ஒரே சமயத்தில் பாதிக்கும் அடாவடித்தனம் நம்மை பாதிப்பதே. பயணத்தில் அதிகமான இங்கிதக் குறைவான நடவடிக்கைகளை நாம் காண்கிறோம். கீழே சில உதாரணங்கள் :
1 பேருந்து சாளரம் வழி துப்புவது. இது மின்ரயிலில் இல்லை. oru நிம்மதி. பேருந்தில் மிகவும் அதிகம்.
2 . பேருந்தில் எல்லோர் காதும் கிழியும் படி தனது கைபேசி வழியாக சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவது.
3 சத்தமாக கைபேசியில் பேசுவதை படித்த படிக்காத மற்றும் எல்லா வருவாய்ப் பிரிவினரும் செய்கிறார்கள்.
4 .மின்சார ரயிலில் ஒரே அலுவலகப் பணியாளர்கள் பெட்டி நெடுக எழுந்து சென்று காலை உணவுப் பொருட்களை பகிர்ந்து சத்தமாகப் பேசி பிறரை இம்சிப்பது சகஜம்.
5 . கைபேசியை இயக்க மற்றும் செய்தித்தாள் படிக்க அருகில் உள்ளவரை முழங்கை வைத்து இடித்தபடியே வருவது ஆண்களின் தவறாத இங்கிதமின்மை.
6 ரயில் பேட்டியின் இறங்கு வழியில் மறித்து நிற்பதை போட்டி போட்டுச் செய்கிறார்கள். ஏழை பணக்காரன் படித்த படிக்காதவர் வேறுபாடு இதில் இல்லை.
7 . பேருந்தில் நிற்பவர் இருக்கையின் நுனியில் அமரும் ஆள் மீது ஏறி உட்காருவது போல் இருக்கை மீது மிகவும் எல்லை மீறி சாய்வது வாடிக்கை.
8 பேருந்து ரயில் இரண்டையும் உணவுத் துகள்கள் மற்றும் அவற்றை சுற்றிய பிளாஸ்டிக் பை அல்லது அட்டையால் குப்பையாக்குவது நம் பிறப்புரிமை.
9 . கைக்குட்டையைப் பயன்படுத்தாமல் தும்முவது இருமுவது பற்றி நாம் விதிவிலகினவர்களைப் பார்க்கவே முடியாது.
10 . பேருந்து கொள்ளாத அளவு உள்ள பயணச் சுமைகளை அனைவருக்கும் இடைஞ்சலாகப் பேருந்தின் குறுகிய நடையை ஆக்கிரமிப்பது.
நூறு பேரைப் பாதிக்கும் விஷயங்களை அடாவடியாகச் செய்வதில் பலர் நம் சூழலையே பாதிக்கும் அதாவது கேவலப்படுத்தும் வேலையை செய்வது நம் பண்பாடாகி வருகிறது.
அலுவலகங்கள் மற்றும் உறைவிடப் பகுதிகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.