இங்கிதம் கிலோ என்ன விலை ? -3
இங்கிதக் குறைவு ஒரு நடைமுறையாக வேரூன்றி இருப்பது அரசு அலுவலகங்களில். அதன் தீவிரம் மட்டும் வேறுபடலாம். ஆனால் சில பொதுவான அட்டகாசங்களை நாம் கீழ் காண்போம் :
ஆண் பேதமற்ற சில நடவடிக்கைகள் :
1 . காலையில் பணி இடத்து மைய இடத்தில் நின்ற படி அரசியல் – சினிமா வம்பு இவற்றை காலையிலேயே துவங்கி விடுவது.
2 . சக ஊழியர் அல்லது அதிகாரி என்ன பிரச்சனையில் இருக்கிறார் என்பதை பொருட் படுத்தாமல் விற்பனையாளர்கள் , வங்கி அல்லது காப்பீட்டு முகவர் அல்லது இவர்களில் தம் உறவினரை அழைத்து வந்து ரகளையான விற்பனை செய்வது.
3 . அதிகாரி விடுப்பில் இருக்கிறார் என்று கடுமையான வேலைப்பளுவை சமாளிக்கும் சக ஊழியரின் முனைப்பைக் கெடுப்பது.
4 . அலுவலக கணிப்பொறியில் வம்பு விஷயங்களைத் தானும் பார்த்ததுப் பிறருக்கும் கட்டி அவரது நேரத்தை வீணடிப்பது.
5 . அலுவலகத் தொலைபேசியில் சத்தமாக குடும்ப அல்லது நட்பு உரையாடலைத் தொடர்வது.
ஆண்களின் பிரத்தியேக அட்டகாசங்கள் :
1 . மனைவி பணியிலிருக்கும் சக ஊழியரின் வருமான வசதி சொத்து பற்றி நண்பர்கள் எதிரே பேசி நக்கலடித்தல் .
2 . ஒழுக்கப் போலீசாக மாறி சக ஊழியருள் ஆண் பெண் நட்பை விமர்சிப்பது.
3 . சக ஊழியரின் மகன் மகளை ஒப்பிடத் தன் வாரிசு மேல் என நிலை நாட்டுதல்
4 .ஜாதி மத அடிப்படையில் ஊழியர் அதிகாரிகளைக் கொச்சைப்படுத்திப் பேசுவது.
5 பெண் ஊழியரின் தயக்கத்தைப் பயன்படுத்தி தனது தரப்பே சரியானது என அதிகாரிகளிடம் பெண் ஊழியரைப் பற்றி அவநம்பிக்கையை ஏற்படுத்துவது.
பெண்களின் பொதுவான இங்கிதக் குறைவான போக்குகள் :
1 . மின்தூக்கி போன்ற எக்குத்தப்பான இடங்களில் தோழியின் ஆடை பற்றி அல்லது சமையல் பற்றிப் பாய்ந்து உரையாடல்
2 . ஒரு வருத்தத்தில் நம்பி ஒரு தோழி பகிர்ந்ததை தம்பட்டமடித்து அவருக்கு தர்மசங்கடம் உருவாக்குதல்.
3 . தின்பண்ட விநியோகம் , தமது இல்ல நிகழ்ச்சிப் புகைப்படம் என அதிகாரி சம ஊழியர் அனைவரையும் நெடுக்கடித்து மகிழ்தல்
4 . புடவை நொறுக்குத் தீனி விற்பனையாளர்களை வளாகத்துக்கு உள்ளே வரவழைத்துச் சூழலை மட்டப்படுத்துதல்.
5 . பண்டிகை நாட்களுக்கு முன் உச்ச கட்டக் கொண்டாட்டம் கடை விஜயம் ஆடை அணிவகுப்பு என வளாகத்தின் தொழில் மேம்படும் தீவிர நடவடிக்கைகளை நாசம் செய்தல்.
இங்கிதமும் தொழில் பக்தியும் கடின உழைப்பும் உள்ள ஆண் பெண் ஊழியர் அநேகர். ஆனால் பத்தில் ஒருவர் இங்கிதக் குறைவாயிருந்தாலும் அது மொத்தச் சூழலை கடுமையாய் பாதிப்பதே உண்மை.
பொது இடங்களில் வணிகர் மற்றும் பொது மக்கள் செய்யும் அநியாய அத்து மீறல்கள் மற்றும் இங்கிதம் இல்லாப் போக்குகள் பற்றி அடுத்த பகுதியில்
(image courtesy:newofdelhi.com)