இங்கிதம் கிலோ என்ன விலை ? -4
பொது இடங்கள் ஆக்கிரமிப்புக்கு என்றே ஏற்படுத்தப்பட்டவை என்பது நமது புரிதல். பெரிய குழுமமான வணிக நிறுவனங்கள் , சிறிய வியாபாரிகள் யாரானாலும் முதலில் ஆக்கிரமிக்க விரும்புவது பாதசாரிகள் நடை பாதை அதாவது நடை மேடை. எந்த வணிக வீதியிலும் மக்கள் நடக்க நடுவீதியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. வீதிகளிலிலும் வணிக வாகனங்கள் மற்றும் வாடகை ஆட்டோக்கள் போக்குவரத்தை மறித்தே அன்றாடப் பிழைப்பு செய்கிறார்கள்.
ஒரு சிறிய பட்டியலிடலாம் :
வணிக நிறுவனங்கள் கடைக்கு உள்ளே வெளியே எங்குமே மக்கள் புழங்க இடம் வைப்பதே இல்லை. சிறிய கடை பெரிய ஆக்கிரமிப்பு என்பதே மந்திரம்.
மக்கள் பிறருக்கு வழி விடுவது அல்லது பொறுமை காப்பது என்பதை ஒரு நல்லியல்பாக எடுத்துக்கொள்வதே இல்லை. பொருள் வாங்கக் கடைக்குப் போவது ஒரு சவாலாகவே இருக்கிறது.
மத அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் பல முறை போக்குவரத்தை நிறுத்துவது நாம் சகித்துக்கொள்ளும் ஓன்று.
புதிய சாலையில் ஓட்டை போட்டு அவர்கள் கம்பு நட்டுக் கொண்டாடுவது கேள்விக்கு அப்பாற்பட்டது.
பாதசாரிகளை பள்ளி மாணவர் முதல் தொழில்முறை வாகனஓட்டிவரை யாரும் மதிப்பதில்லை.
வாகனங்களும் இரைச்சலும் விரைவும் மட்டுமே வெளியுலகம் என்று நகரங்களில் நிலை நாட்டப் பட்டு விட்டது.
நட்பு வட்டம் உறவு இவர் இந்தச் சூழலை இன்னும் சகிக்க முடியாததாக ஆக்குவது கீழ்க்கண்டவாறு :
கொண்டாட்டம் இருவகை- குடும்பக் கொண்டாட்டம் ஓன்று மற்றது பண்டிகை. இரண்டிலும் உணவு விவகாரங்களில் கொடுக்கல் வாங்கல் ஒன்றாய் நேரம் செலவிடுதல் கட்டாயம்.
உருப்படியாய் வாசிப்பு, நல்ல சொற்பொழிவுக்குப் போவது அல்லது சிந்திப்பது எதுவுமே இந்தக் கும்பல் மனப்பாங்கில் சாத்தியமே இல்லை.
பரிசு உணவு இவை தலையில் கட்டப்படுவது மட்டுமல்ல பதிலுக்கு செய்யத் துவங்கி இதுவே முக்கால்வாசி நேரத்தை சாப்பிடுவது கண்கூடு.
கும்பலில் இருந்து விலகி இருக்க அசத்திய மனோதைரியம் வேண்டும்.
குடும்பத்துக்கு உள்ளே நாம் எந்த அளவு இங்கிதக்குறைவு மற்றும் அத்து மீறலில் ஈடுபடுகிறோம் ? அடுத்த பகுதியில் .
(image courtesy: youtube)
இந்த கட்டுரையின் நான்கு தொடர்களையும் இன்றுதான் படித்து முடித்தேன். நம் நாட்டு மக்களுக்குள் இயல்பாகவே ஊறிப்போன இங்கிதம் பற்றி நல்ல அலசல். இவற்றைச் சீர்திருத்த பள்ளிப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும். சட்டத்தின் துணையோடு வியாபாரிகள் செய்யும் ஆக்கிரமிப்புகள் பற்றி ஒரு பெரிய பதிவே எழுதலாம்;