இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7


Image result for internet etiquette images

இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இங்கிதம் இல்லை என்றே கூறி விடலாம். அநேகமாக நாசூக்கும் சொரணையும் அதிகம் உள்ளவர்கள் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களை விட்டு ஒதுங்கி விடுவதே ஒரே வழி.

சமூக வலைத் தளம் என்பவற்றில் நான் முகநூலையும் சேர்த்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் நான் கடுமையான விமர்சனங்களை சமூக வலை இயங்குதல் மீது வைக்கப்போவதில்லை.

இந்தத் தொடர் நம் சூழல் பற்றி நமக்கே சுயவிமர்சனம் செய்ய ஒரு பார்வையை முன்வைப்பது . இணைய இயங்குதல் ஏதோ அச்சு அல்லது தொலைகாட்சி ஊடகங்களை ஒப்பிட மோசமாயிருப்பதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பிற ஊடகங்களில் உள்ள அடைப்பு மற்றும் இறுக்கம் , பதிவர்களை இணையத்தில் ஒரு வடிகால் கண்டது போல் பன்மடங்கு வேகத்துடன் இயங்க வைப்பதே உண்மை.

பரபரப்பு எந்த ஊடகத்தில் இல்லை ?
வம்பு எங்கே இல்லை ?
வதந்தி எங்கே இல்லை?
கேவலப்படுத்திடுவது எங்கே இல்லை?
ஓரம் சார்வது எங்கே இல்லை?
அசட்டுத்தனம் எங்கே இல்லை?
அற்பப் புகழுக்கு அலையாத ஊடகம் எது?
இருபக்கமும் வெளியிடும் இங்கிதம் உள்ள ஊடகம் இருக்கிறதா?

எது மைய நீரோட்ட ஊடகத்தில் இருக்கிறதோ அதுவே இணையப் பதிவுகளிலும் வெளிப்படுகிறது.

எந்த அரிப்பும் இங்கிதமின்மையும் பிற ஊடகங்களில் பெருகிப் பாய்கின்றனவோ அவையே இணையத்திலும் வெளிப்படுகின்றன.

பல சமயங்களில் கட்சி சாதி அமைப்புக்கள் பல பதிவுகள் வேறு எந்த ஊடகத்திலும் வர விடாமல் செய்து விடுகின்றன . இணையம் மட்டுமே பதிவுகளுக்கு இடமளிக்கிறது. இது இணையம் ஒரு பெரிய புகலிடமாயிருக்க மற்றொரு காரணம்.

நிபுணத்துவம் மற்றும் ஆழம் காணுதல், ஆய்வு எதுவுமே இல்லாமல் பதிவுகள் மைய ஊடகங்களில் வருவது சகஜமாயிருக்கும்
போது  இணையம் மட்டும் நம்மை உறுத்துவது வேறு காரணங்களினால்.

மைய ஊடகங்களின் வழி புகழ் பெற்ற பலருக்கும் இணையம் உறுத்துவது இயல்பே. இணையத்தில் தீவிர இலக்கியம், சட்டத்துறை அல்லது அறிவியல் இவை போல எண்ணிலாத் துறைகளில் விஷய தானம் செய்து நம் அறிவை வளர்க்கும் பல தளங்கள் உண்டு . தவறான பயன்பாடு மைய ஊடகத்தைத் தவறாகப் பயன்படுவோருக்கு இணையாயிருக்கிறது. அவ்வளவே.

இணையம் பலகாலம் பலருக்கும் உடன் கிடைக்கும் பதிவாய் அமைகிறது. அதை உணர்ந்து இங்கிதமாய்ப் பொறுப்பாய் எல்லோரும் இயங்கும் நிலையே ஆதரிசனமானது.

இணையம் அச்சு பேச்சு எதிலும் நாம் இங்கிதம் பேணும் பண்பாட்டைக் கைவிடக் கூடாது.

இது கனவே.

இங்கிதம் ஏன் காணக் கிடைப்பது அருகிக்கொண்டே போகிறது ?

அடுத்த பகுதியில்

(image courtesy:pinterest.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s