இங்கிதம் கிலோ என்ன விலை -8 ?


இங்கிதம் கிலோ என்ன விலை -8 ?

நேற்று ஏழாம் பகுதி எழுதிக் கொண்டிருக்கும் போதே இரண்டு தாக்குதல்கள். என் மனைவியின் தோழி தன் மகளுடன் வந்தவர் கிளம்ப வேண்டாம் என முடிவெடுத்துப் பேசிக் கொண்டே போனார். உடல் நலம் தேறாத நிலையில் உள்ள மனைவியின் இரவு உணவும் என் சவால் தானே ? வந்த இருவருக்கும் உணவு வாங்க நான் தயார். ஆனால் வந்தவர் பொழுது போக்கித் தன் வீட்டில் சாப்பிடப் போக முடிவெடுத்தவர். நேரம் கடக்கக் கடக்க எரிச்சலும் அதிகரித்தது. நல்ல கல்வி அந்தஸ்து உள்ளவர்.

மறுபக்கம் நீங்கள் புகைப்படத்தில் காணும் வீடு எங்கள் வளாகத்திலிருந்து பத்தடி சந்தால் பிரிக்கப்பட்ட பக்கத்து வீடு. நீல வண்ணக் கொட்டகையை போட்ட அதன் சொந்தக்காரர் பாரத நாட்டியம் மற்றும் ஐ ஏ எஸ் வகுப்புக்களை அங்கு நடத்தி வருகிறார். அதனால் வரும் சத்தம் என் அறைக்கு நேரெதிரிலிருந்து வந்தபடித் தான் இருக்கும். இந்தியன் தமிழன் அல்லவா நான்? சகித்தே வந்தேன். சகிக்கும் அளவு சத்தம் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். என் சகிப்புத் தன்மைக்கு நேற்று அவர் பெரிய சவால் ஒன்றை வைத்தார். பெரிய பெரிய ‘ஸ்பீக்கர்’ கள் வைத்து சினிமாப பாடல் போட்டு ஒரு விருந்து நடத்தினார். என் வீடே அதிர்ந்தது. என் வளாகத்தில் உள்ள இன்னொருவருடன் சென்று பணிவாக ஒலியைக் குறைக்கும்படி வேண்டினேன். அவரும் தலையசைத்தார் . ஆனால் ஒலி முழு வீச்சில் தொடர்ந்தது. மறுபடி போனேன். அவரது மகள் மாடியிலிருந்து இறங்கி வந்தார். அவரது உடல் மொழி எதிர் வினை என்னை ஒரு தொல்லையாகக் கருதுவதை வெளிப்படுத்த ‘பத்து மணிக்குள் இதை முடியுங்கள். இல்லையேல் காவல் துறையை அழைப்பேன் ‘ என்று சொல்லித் திரும்பினேன். இன்னும் பத்து நிமிடம் பத்து மணிக்கு. கைத்தட்டலும் பாட்டுச் சத்தமும் இப்போதைக்கு அது முடியாது என்று காட்ட மீண்டும் சென்றேன். இந்த முறை வேலைக்கார அம்மாள் வந்தார். ” ஒரு நாள். குழந்தை பிறந்த நாள் அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோங்க. எல்லோரும் செய்யறது தானே இது?” என்று அவர் முடிக்க நான் கத்தினேன். காவல் துறை வரை இது செல்வது அவருக்குத் தரப்போகும் வருத்தத்தைத் தவிர்க்கவே நான் கத்தினேன். எங்கள் இரு வளாகங்களுக்கும் பின்னே நெருக்கிக் கட்டிய சிறு வீடுகள் உண்டு. அதிலிருந்து ஒருவர் எனக்கு நிறைய அறிவுரை வழங்கி , ஜன்னலை மூடிக் கொள்ளும் படி ஆலோசனை சொன்னார். ‘ ஜன்னலை மூடிய பின்னும் காதே செவிடாகிறது’ என்று பதில் சொல்லி முடித்தேன். குரலை உயர்த்தியதற்குப் பலன் இருந்தது. ஒரு வழியாக நான் உறங்கினேன்.

ஆடி மாதம் எந்தத் தெருவானாலும் விடியற்காலை முதல் ஒலி மாசு உத்திரவாதம் உண்டு. ஆனால் அந்தக் கணக்கில் இவரது ஒலி உற்சாகத்தைச் சேர்க்க முடியாது. திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயில் தெருவில் ஒரு முட்டு சந்தில் ‘அஸ்பெஸ்டாஸ் ‘ கொட்டகை போட்டு லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் தொழில் மூளை அவருடையது. நாளைக்குப் பின் இந்த விருந்துக் கொண்டாட்டத்தை வணிக ரீதியில் பலருக்கும் இந்த மொட்டை மாட்டிக் கொட்டகையை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர் நீட்டிப்புச் செய்தால் என் கதி?

இங்கிதமோ மனித நேயமோ இரக்கமோ எதுவுமே இல்லாமல் நாம் என்ன வேண்டுமானாலும் செய்ய- சகிக்கப் பழகி விட்டோம். இதை சுயவிமர்சனம் மூலம் மட்டுமே நாம் சரி செய்து கொள்ள முடியும் .

ஒரு தனி மனிதன் என்ன இழக்கிறான் இங்கிதக் குறைவால் ? அடுத்த பகுதியில்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s