இங்கிதம் கிலோ என்ன விலை ?-10 என்னை மிகவும் பாதித்த உளவியல் விளக்கம்
“மக்கள் நாம் அவர்களிடம் பேசியதை மறக்கலாம். அல்லது பொருட்படுத்தாமல் விட்டு விடலாம். ஆனால் நாம் அவர்களை எப்படி நடத்தினோம் என்பது அவர்கள் மனதில் அமைப் பதிந்திருக்கும் . அதுவே அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய பிம்பமாய் நிற்கும் ”
இதைப் படித்த உடன் இதன் தாக்கம் என்னுள் ஆழமாய் ஏற்பட்டது. நாம் ஒருவரை மதிக்குமளவு அவரிடம் உள்ள நல்லியல்புகள் வெளிப்படும். ஆளுக்கு ஆள் பழகுவதில் உள்ள வித்தியாசங்களை இதுவும் ஒரு காரணம்.
எல்லோருக்குமே கண்ணியமாக நடத்தப்படுவதற்கு உரிமை கட்டாயமாக உண்டு. உங்களை நான் அவமதிக்காமல் உங்கள் எதிரே கீழ்மையான ஒரு உடல்மொழி அல்லது செய்கையை வெளிப்படுத்தினால் அது மறைமுக அவமானமாகவே ஆகிறது.
“மட்டமானவர் நாம் அனைவருமே ” என்பதே எல்லா இங்கிதக் குறைவுக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் செய்தி.
மட்டமான ஒரு சூழல் யாருக்குமே அருவருப்பையும், விலகிச் செல்லும் தவிப்பையும் ஏற்படுத்தும்.
அரசியலை ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பெரும்பான்மைக் கட்சிகளில் கவுரவமாக நடத்தப்படும் உத்திரவாதம் கிடையாது. அடிவருடிகளாய் ஆட்டு மந்தைகளாய் மாறத தயாராயிருப்போர் மட்டுமே இயங்க முடியும் கட்சிகள் அநேகம். எந்தக் கட்சிக்குள்ளும் ஜனநாகயம் என்று ஓன்று கிடையவே கிடையாது.
விளைவு?
படித்தவர்கள் விவரமானவர்கள் அந்தக் கட்சிகளுக்குள், அரசியலுக்குள் செல்லாத தயங்கி அரசியல் என்றாலே தரக் குறைவானோர் தன்மானமில்லாதோர் இடம் என்று நிறுவப்பட்டு விட்டது.
பல குடும்பங்கள் பிரிய , பல உறவுகள் முறிய இங்கிதமின்மை முக்கியக் காரணம் .
பிறர் மட்டுமல்ல நாமே நம்மை மரியாதையுடவராக உணர இங்கிதம் மட்டுமே உதவும்.
ஒரு நாகரீகச் செயலாக இதை நாம் நமக்குள் விதைத்துக் கொள்வது தாற்காலிகப் பயனே தரும்.
‘மரியாதைக்கு எல்லோரும் உரிமையுள்ளவர் . இங்கிதம் எல்லோருக்கும் என் தரப்பு நட்புப் பரிசு’ என மனதார நாம் நம்புவது மட்டுமே தீர்வு.
(நிறைவுற்றது)
(image courtesy:pinterest.com)