குழந்தைகள் மனதில் பதியும் கற்பித்தல் எப்படி இருக்கும் ? – தினமணி கட்டுரை
துளசிதாசன் யாழி தினமணியில் கீழ்க்கண்டவாறு ஒரு நல்ல ஆசிரியரின் கற்பித்தலைக் குறிப்பிடுகிறார் :
————————————
உயர்ந்த லட்சியத்திற்கானது எனது பிறப்பு என்று ஒவ்வொரு குழந்தையையும் உணர வைக்கிற இடமே கல்வியின் உச்சம். கல்வியின் உன்னதம். (Excel) வகுப்பறைக்குள் ஒளித்து வைக்க முடியாதபடி திறமைகளை காட்சிப்படுத்த வேண்டும். வகுப்பறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் அதற்கு இரண்டு முக்கியமான கருவிகளை கையாள தெரியவேண்டும் 1.கற்பனை 2.வாசிப்பு. கற்பனை உலகத்தை வாசிக்க தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே கற்பனை உலகத்திற்குள் குழந்தைகளை அழைத்து செல்ல முடியும் அவர்களே புதிய உலகத்தை படைக்கிறார்கள். படைப்பாளிகளாக மாறுகிறார்கள். படைப்பு மனமே கல்வி மனம். கற்பனை செய்வதற்கு நிறைய வாசிக்க வேண்டும்.ஒரு நல்ல இலக்கிய வாசிப்பு ஒரு சிறந்த ரசனை படைப்பாளியை உருவாக்கும்.ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைப்பாளிகளை இனம் கண்டு வெளியே கொண்டு வருவதும் கொண்டாடுவதுமே கல்வியின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க பழக வேண்டும். கற்பனை உலகத்தில் பயணிக்க தெரிய வேண்டும் ஆசிரியர்கள் ஒரு வாசிப்பு இயக்க மாற வேண்டும்இதுவே அடுத்த கல்வியுகத்திற்கான உடனடி தேவை.
——————————————
மாதா, பிதா, குரு எனக் கும்பிடச் சொல்லியே கேள்விக்கு அப்பாற்பட்ட குடும்பத் சூழல் ,மண்டியிட்டு ஏற்க வேண்டிய வகுப்பறை என நாம் காலகாலமாக குழந்தைகளுக்குத் தவறான பாதை காட்டி விட்டோம்.
ஒரு குழந்தையின் தனித்தன்மையை வெளியில் கொண்டு வரும் முனைப்பு குடும்பம் வகுப்பறை இரண்டிலுமே இல்லை.
குழந்தைகளின் தன்னம்பிக்கை மிகுந்த ஆளுமை முளைத்தெழ , வேர் விட பின் விருட்சமாய் நிமிர நாம் விரும்புவதே இல்லை.
மனத்தில் பதியும் வெளியான செய்முறைக் கல்வி , விவாதங்களுடன் கூடிய இருக்கமில்லா வகுப்பறைச் சூழல் இவை நமக்கு கற்பனையிலும் கூட அந்நியமானவை.
கற்பனை வெளிப்படும் வளமான மனங்களை, ஆளுமை வலிமையான தலைவர்களை நாம் உருவாக்க விரும்புவதே இல்லை.
கல்வி முறை மாறுவது எப்போது சாத்தியம் ? குழந்தைகளை நாம் ஆட்டு மந்தைகளாக அணுகுவது மாறும் போதே.
கட்டுரைக்கான இணைப்பு ———————- இது.
(image courtesy: http://www.everystockphoto.com/photo.php?imageId=16548503)