சாம்பியன்


Image result for beauty contest cartoon images

சாம்பியன்

சத்யானந்தன்

நான் இப்போது அனுப்பிய எண நம் சுமதியின் தோழி தாராவின் அம்மாவுடையது. தாராவின் மூன்றாம் பிறந்த ாள் இரவு ஒன்பது மணி அளவில் முடியும். சுமதியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள். குழந்தைக்கான பரிசை நான் அவர்கள் வீட்டில் சுமதியை விடும் போதே கொடுத்து விட்டேன்.

மின் தூக்கி ஆறு மாடிகள் இறங்கும் இடைவெளியிலேயே சித்ரா இந்தச் செய்தியைவாட்ஸ் அப்பில் அனுப்பி முடித்திருந்தாள்.

தரைத்தளம் சென்றடைந்து கதவுகள் திறந்ததும்ஒலா ஆப்ஸ்ஸை அழுத்தினாள். அருகிலேயே ஒருமினிபத்து நிமிடங்களில் கிடைக்கும் என்பதை அறிந்து முகம் மலர்ந்தாள். கீழ்ப்பக்கம் இரண்டு சிறிய சக்கரங்கள் உள்ள பயணப்பையை அதன் நீண்ட கைப்பிடிகளால் பற்றினாள். இழுத்தபடி பிரதான ாயிலுக்கு வந்தாள். செக்யூரிடிஓடி வந்து நின்றான்.ஓலா டாக்ஸி வந்ததும் கூப்பிடுங். அவன் தலையசைத்ததும் இடது கைப்பக்கம் குழந்தைகள் விளையாடும் பகுதி அருகிலிருந்தசிமெண்ட் பெஞ்ச்சில் அமர்ந்தாள். மாலை ஐந்து மணிக்கும் அது சூடாகவே இருந்தது. பையைத் திறந்துதுவாலைத் துண்டை வெளியில் எடுத்தாள். அதை அந்த அமர்விடத்தின் மீது போட்டு அதன் மேல் அமர்ந்தாள்.

நான் ஏன் சுமதியைக் கூட்டி வர ேண்டும்?” கைபேசியில் பதில் வந்தது.

அம்ம மருத் துவமனையில் இருக்கிறார். இன்று இரவு அவருடனிருந்து கவனித்து விட்டு காலையில் தான் வருவேன்.

வாரக் கடைசியில் நீ போயிருக்கலாம்.

இது பற்றிய ுடிவை உங்களிடம் நான் விடவில்லை. சம்பாஷணையை முடித்தாள்.

சுமதியை விட சற்றே பெரிய ுழந்தை. ரோஜாப்பூ நிற்ராக்‘. உருண்டை விழிகள். கும்மென்ற அழகான கன்னங்கள். தள்ளி நின்று அவளைப் பார்த்தாள் குழந்தை. சித்ராவாஎன்று கையால் சைகை செய்து அழைத்தாள். குழந்தை மெதுவாக நகர்ந்து சறுக்கு மரம் அருகே சென்று மறுபடியும் சித்ராவைப் பார்த்தாள். எழுந்து அருகே போனால் வந்த வழியிலேயே வீட்டுக்குக் குழந்தை ஓடி விடுமோ எனத் தயங்கினாள் சித்ரா.

கைபேசியில் செய்தி வரும் சிணுங்கல். கல்லூரியின் முதல்வர் மூவர்ணக் கொடி, மயில், பாரதத் தாய், காந்தித் தாத்தா ஆகிய ான்கு படங்களை

அனுப்பி இருந்தார். கையில் உள்ள பல வண்ணத் துணிகளை மாற்றி ஒரே போல் அசைத்து வெவ்வேறு பிரம்மாண்ட வடிவங்கள் காட்டும் நிகழ்ச்சியை இரண்டே நாள் பயிற்சியில் சித்ராவும் அவளது குழுவும் மாணவ மாணவிகளைச் செய்ய வைத்தனர். அந்த இரண்டு நாளும் களைப்பையெல்லாம் மீறி அவனுக்கு இரவு உணவு தயார் செய்தாள். இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து வந்து அந்தச் சாதனையைக் காண அவன முன்வரவில்லை. அம்மாதான் தொலைபேசியில் உற்சாகப்படுத்தியவர். ஆனால் நேற்று முதல் அவர் சித்ராவின் அழைப்புக்களை ஏற்கவே இல்லை. பக்கத்து வீட்டின் தரைவழி பேசித் தொலைபேசியில்ஆண்ட்டியிடம் பேசிய ோது தான் அம்மா ரத் தக் கொதிப்புக்காக மருத் துவ மனையில் அனுமதியானது தெரிய வந்தது. 20 கிமி தூரமுள்ள மருத்துவமனைக்குப் போகத் தொழிலோ குடும்பமோ அனுமதிக்கவில்லை.

அம்மாவின் உடல் நிலை, தனது பணிச்சுமைகள் பற்றி அவனிடம் பேசவே வாய்ப்பிருக்கவில்லை. மடிக்கணினியுடன் அவன் அமர்ந்தால் சுமதியே அவனிடம் போக ாட்டாள். காதலித் ாட்களிலேயே அவன் அவள் கனவுகளை செவி மடுத்ததில்லை. திருமணத் துக்குப் பிறகுஈவெண்ட் மேனேஜ்மெண்ட்என்னும் சுயதொழிலில் அவள் சோபிப்பதை அவன் ரசிக்கவே இல்லை.

கலகலவெனச் சிரித்தபடி ஒரு குழந்தைப் பட்டாளமே வந்தது. இருப்பதிலேயே உயரமான ுழந்தை கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தாள்.

வரிசையாய் நில்லுங்கள்.சிறிய ுழந்தைகள் அப்படியே செய்தன.

உட்காருங்கள். எழுந்திருங்கள்.அவள் கட்டளைகள் பறந்தபடி இருந்தன.

எப்பப் பாத் தாலும் டீச்சர் விளையாட்டுத் தானா?” என்றான் சுமதியை விடச் சற்றே பெரியவனான ஒர சிறுவன்.

ஓகே. ஒரு காம்பெடிஷன்.

என்னக்கா காம்பெடிஷன்?”

என கையிலே என்ன இருக்கு?”

ஸ்டிக்.

இது தமிழ்ல என்ன?”

பேம்பூ,என்றான் மற்றொரு குழந்தை.

அக்காக் குழந்தை அவன் தலையில் குட்டினாள். ஸ்டிக் இங்கிலீஷ் வர்ட். தமிழ் வர்ட் என்?”

நான் சொல்லட்டாக்கா?”

யெஸ்.

மூங்கில்.

குட்இந்தா.. ஒரு சிறிய ாக்லெட்டை தன்ஜூன்ஸ் பேண்ட்‘ ‘பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தாள் பெரிய குழந்தை. அடுத்த க்வெஸ்ட்சன் இதுக்கு என்னென்ன யூஸ்? புது யூஸ் சொல்ற ஒவ்வொருத்தரும் ஒரு சாக்லெட் வின் பண்ணலாம்.

டீச்சருக்கு பசங்களை அடிக்க.

இது புது யூஸ் கிடையாது. இப்போ தானே நானே டீச்சர் கேம் ட்ரை பண்ணினேன்.

போலீஸுக்கு யூஸ் ஆகும்.

குட்.ஒரு சாக்லெட் கை மாறியது.

நெக்ஸ்ட்யாரு?” பதிலே இல்லை. நிசப்தம். கமான்,துரிதப் படுத்தினாள்.

துணி காயப் போடலாம்.

மாடு மேய்க்கலாம்.

குரங்கை விரட்டலாம்.

நீளமா இருந்தா கொம்பு சண்டை போடுவாங்.

ஒலிம்பிக்ஸ்ல ெரிய மூங்கிலை வெச்சுபோல்வால்ட்டுனு தாண்டுவாங்க.

உறி அடிப்பாங்க, இப்படியாக நிறைய குழந்தைகள் சாக்லெட் வென்றனர்.

இதையெல் லாம் விட ஒர முக்கியமான யூஸ் இருக்கு…. அதைச் சொல்றவங்க சாம்பியன்…”

பல ொடிகள் குழந்தைகள் மௌனமானார்கள். “யாருக்குமே தெரியலியா?” பெரிய ுழந்தை அறிவிப்புத் தொனியில் கேட்டாள். ஓகே. நானே சொல்றேன்.

புல்லாங்குழல்.. இங்கிலீஷ்ல ்ளூட்இதுதான் இந்த மூங்கிலோட பெஸ்ட் யூஸ்…” என்றவள் ஒரு நொடி நிறுத்தி,நான் தான் சாம்பியன்,என்றாள்.

குழந்தைகள் கைத்தட்டினர்.

காவலாளி விரைந்து வந்தார்.அம்மாடாக்ஸி வந்திடுச்சு

இஸபெல் ஆஸ்பிடல் மைலாப்பூர்.

ட்ராப் மட்டும் தானா மேடம்?”

ஆமாம்.

பழைய மகாபலிபுரம் சாலை மாலை நேரத்து வாகன நெரிசலில் திணறிக் கொண்டிருந்தது. விடியற்காலை முதல் பம்பரமாகச் சுழன்ற ித்ரா மெல்ல ஊர்ந்த வாகனத்துக்குள் கண்ணயர்ந்தாள்.

மேடம்ஆஸ்பிடல் வந்தாச்சு,ஓட்டுனரின் குரல் அவளை எழுப்பியது. பயணப்பையை இழுத்தபடி மருத்துவமனையின் வரவேற்பு அலுவலகத்தை அடைந்தாள்.

கற்பகம் நீலகண்டனா?” கணிப்பொறியில் வரவேற்பாளர் தேடினார்.மத் தியானமே டிஸ்சார்ச் ஆயிட்டாங்க.

அம்மாவின் கைபேசிக்கு முயன்றாள். அணைத்து வைக்கப் பட்டிருக்கிறதுஎன்று ஒரு உலோகக் குரல் பதிலளித்தது.

அம்மா தனது வேலைப்பளுவை முன்னிட்டு தன்னைத் தவிர்க்கிறாரா? என்ன தான் ஆயிருக்கும் அவருக்கு?

நுழைவாயில் வரை வரும் போது தான் அப்பா ஊரிலில் லா விட்டாலும் அவருக்கு அம்மாவின் விவரங்கள் தெரிந்திருக்கும் என்று பட்டது. அவரது எண்ணுக்கு முயன்றாள். பதிலில்லை.

ஆட்டோ ஓட்டுனரிடம்கற்பகம் கார்டன்ஸ்,என்றாள்.

உங்களுக்கு வழி தெரியுமாம்மா?”

மந்தைவெளிக்குப் போங். அப்புறம் சொல்றேன்.

அவளுடைய பள்ளிக் கூடத்தைக் கடந்து வாகனம் விரைந்த போது அம்மா தனது சிறிய சிறிய பிரச்சனை அல்லது சாதனைக்கெல்லாம் அந்தப் பள்ளிக்குத் தன்னுடன் வந்து போனது நினைவில் கொப்பளித்தது.

முதல் மாடியில் தான் அந்தத் தொகைக் குடியிருப்பில் அவர்களது வீடு. மூச்சிறைக்க படிகளில் பயணப்பையைத் தூக்கியபடி விரைந்தாள்.

அழைப்பு மணியை இரண்டாவது முறை அழுத்தியும் பதிலில்லை. மயக்கமாக இருக்கிறாரோ? கண்களில் நீர் திரண்டது.

மூன்றாவது முறை அழுத்தியவுடன் கதவு திறந்தது. அப்பா! எப்போது ஊரிலிருந்து வந்தார்?

வாட் ஸர்ப்ரைஸ் சித்ரா கண்ணு? சுமதி எங்கே?” அணைத்துத் தலையில் முத்தமிட்டபடியே கேட்டார்.

அம்மா எப்படிப்பா இருக்காங்? ஏன் நீங்க ோனையே எடுக்கலை?”

டிவி சத்தத்திலே கேக்கலேம்மா.

(published in femina tamil edition in Nov 2016)

image courtesy: http://doctorvoodoocartoons.com/beauty-pageant/

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s