ஜல்லிக்கட்டு – ஊடகம் சினிமா பிரபலங்களின் வியாபார எழுச்சி
ஒரே குரலில் பத்திரிக்கை தொலைக்காட்சி சினிமா நடிகர் எல்லோரும் தமிழ் பண்பாட்டுக்கு வந்த எல்லா ஆபத்தும் ஜல்லிக்கட்டில் நீங்கும் என கர்ஜிக்கிறார்கள்.
நாதஸ்வரம் ஒரு தொலைக்காட்சியில் வருடம் எத்தனை மணி நேரம் வரும் என்று கூறுவது யாருக்கும் கடினம். நாட்டுப்புறக்கலைகள் , நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இலக்கிய விவாதங்களுக்கு தொலைக்காட்சியில் அநேகமாக இடமே கிடையாது.
இந்தி எதிர்ப்புக்குப் பிறகு மாணவர் பெரிய அளவில் எழுந்திருப்பது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தான் .
தமிழ் திரைப்படங்களில் தமிழ் பண்பாட்டின் சித்திரம் என்னவாக இருக்கிறது? எந்த மாதிரியான இடத்தை நடிகர்கள் தமிழ் பண்பாட்டின் தலைமுறை மாற்றங்களை உள்ளடக்கி உறுதி செய்திருக்கிறார்கள்? திரைப்படங்களில் பெண்களுக்குத் தரப்படும் இடம் என்ன ?
தான் விரும்பும் பெண்ணைத் துரத்தித் துரத்திக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்யும் கதாநாயகர்கள் சினிமாவில். கொலை – அமிலம் வீசி உருக்குலைப்பு இவை நிஜத்தில் .
மது அருந்துவது தமிழ் இளைஞனின் முக்கிய அடையாளமாகக் காட்டும் சினிமா பற்றிய நமது புரிதல் என்ன ?
சுமார் இரண்டு வருடம் முன்பு ஜெயமோகன் ஆங்கில எழுத்துக்களிலேயே என் தமிழை எழுதி பழக்கக் கூடாது என ஒரு பதிவில் குறிப்பிட்டார். என்னையும் சேர்த்துப் பலரும் எதிர்த்தோம்.
இன்று ‘ஜல்லிக் கட்டு’ என்னும் ஒரு வார்த்தையையோ அல்லது ‘ஏறு தழுவுதல்’ என்னும் இரு சொற்களையோ பிழையின்றி எழுதும் இளைஞர் எத்தனை பேர் தேறுவார்கள்? ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் எத்தனை பேருக்குத் தமிழில் பிழையின்றி எழுத வரும் ?
தமிழில் பட்டப் படிப்பு மற்றும் வேலைக்கு இந்தக் கட்சி கடைசியாகக் குரல் கொடுத்தது?
ஏழை எளியோர் தொடங்கி ஆங்கில மோகம் இல்லாதோர் சதவிகிதம் என்ன என்று நாம் இரட்டை இலக்கத்தில் பார்க்க முடியுமா ?
மன்னர்கள் உருவாக்கிய ஏரிகள் நீர் நிலைகளை நாம் பசுமை அடிப்படையில் அல்லது பண்பாட்டு அடிப்படையில், எந்த விதத்திலும் ஏன் பாதுகாக்கவில்லை?
எல்லா ஜாதியும் ஒரே கோயிலில் கும்பிட வேண்டும் என எந்தப் பண்பாட்டுப் போராட்டமும் நடக்கவேயில்லை ?
தற்கொலை செய்த விவசாயிக்கு என ஏன் இதில் நூற்றில் ஒருவர் கூடக் குரல் தரவில்லை ?
இந்தப் போராட்டத்தில் பெரிய கட்சிகள் ஓரம் கட்டப் பட்டிருக்கின்றன. இது நம்பிக்கை தரும் துவக்கம்.
(image courtesy:newscrunch.com)