கூட்டம் சிந்திப்பதில்லை
எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் நேரில் கண்ட மிகப் பெரிய எழுச்சிகளை வரிசைப்படுத்துகிறேன்.
முதலாவதாக நான் பதின்களில் பார்த்த அதிர்வலை ‘நெருக்கடி நிலை பிரகடனம் ஆன போது. எதிரெதிர் கொள்கை உள்ள சோ-ஆர் எஸ் எஸ் , திமுக , கம்யூனிஸ்ட் இவர்களே அப்போது கருத்துக் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கலைஞர் கருணாநிதி தாமே வீதிகளில் துண்டுப் பிரசரும் வினியோகித்தார். மிசா கணேசன் போல பல திமுக முக்கியஸ்தர்கள் சிறை சென்றனர். அப்போதெல்லாம் காங்கிரசில் இருந்த பழ.நெடுமாறன், பின்னாளில் தீவிர தமிழ் தேசியவாதியாக மாறினார்.
எனக்கு இருபது வயது நெருங்கும் போது மாணவர்கள் பெரிய அளவில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தனர்.
எனக்கு முப்பது நெருங்கும் போது உலகமயமாக்கம் – தாராளமயமாக்கம் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தது. ஒரு பக்கம் கம்யூனிஸ்ட் மறுபக்கம் ஆர் எஸ் எஸ் இருவருமே சுதேசி பேசினார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு இவை எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. இன்று சமூக வலைத் தளம் மற்றும் கைபேசி வழி எளிதாய் ஓன்று படும் நிலை. அன்று இவை இல்லாமலேயே பெரிய எழுச்சி ஏற்பட்டது.
எண்ணிக்கையில் பார்த்தால் ஜல்லிக்கட்டு எழுச்சி முன்பின் காணாததே. எழுச்சி இதற்கு முன்னால் நான் குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இருந்தது.
தொடர்ச்சியான சிந்தனை -விவாதம் எதையும் நான் காணவில்லை. கூடிப் போராடுவது போல கூடிச் சிந்திப்பது என்று ஓன்று இல்லை.
தீவிர இலக்கியம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழி விவாதம் என்னும் மாற்றம் ஒரே நாளில் பெரிய கூட்டங்கள் வாயிலாக நிகழாமல் படிப்படியே நிகழ்ந்தன. சிந்தனையைப் பகிர்வதில் உள்ள முனைப்பு சிந்திப்பதில் இல்லை.
சிந்திக்க எழுச்சி மிக்க இயக்கங்கள் ஆயிரத்தில் ஒருவரையே தூண்டி விடுகின்றன.
சேர்ந்து போராடும் கூட்டத்தில் இருந்து சிந்திக்கும் விவாதிக்கும் ஆளுமைகள் எத்தனை பேர் உருவாகிறார்கள் என்பதே மாற்றத்துக்கு நம்பிக்கை தரும்.
பண்பாட்டு வழி பிரச்னைகளை முன்னெடுப்பது ஒரு வித தேக்கமும் மனச்சோர்வுமான நிலை.
சமூக மற்றம் நிகழ பண்பாட்டுத் தளத்தில் சுய விமர்சனமே சிந்திக்கும் நிலைக்கு கலகக் குரல் பக்குவப் பட வேண்டும் .
அது நிகழும் என நம்புவோம்.