தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்


Image result for jallikattu struggle images

தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்

1969 க்கு முன்பே மொழி வாரி மாநிலங்கள் உருவாகும் போது தெலுங்கானா தனியே மணிலா அந்தஸ்து பெரும் கோரிக்கை இருந்தது. 69 ல் கிடைத்ததெல்லாம் தெலுங்கானா சிறப்பு கவனம் பெரும் என்னும் வாக்குறுதி மட்டுமே. 45 ஆண்டுகள் கடந்து 2014 ல் மட்டுமே தெலுங்கானா உருவானது.

அடிப்படையில் ஹைதெராபாத் நிஜாம் ஆட்சிக்குப்பட்ட பகுதிகள் தான் தெலுங்கானா. பெரிதும் வறட்சி , வேலை வாய்ப்பின்மை இவையே தனி மாநிலக் கோரிக்கையைத் தூண்டியவை.

ஆந்திராவில் இதற்கு ஆதரவு இல்லை. 1969 லேயே தெலுங்கானாப் பகுதி வேலை வாய்ப்பு அந்தப் பகுதி மக்களுக்கே என்னும் விதிமுறைகள் வந்துவிட்டன, கல்வி மற்றும் வருவாய் ஒன்றாயிருப்பதே எஞ்சியிருந்த பிரச்சனை.

ஆந்திராவை தெலுங்கானா பகுதி மக்கள் சீமேந்திர என அழைக்கிறார்கள். இரு பகுதிகளும் பெரிதும் தெலுங்கு தாய்மொழி ஆனோரே பெரும்பான்மை. தெலுங்கானா பகுதியில் உருது பேசும் மக்கள் சற்றே அதிகம் – ஆனாலும் சிறுபான்மையினரே.

தெலுங்கானா உருவாகும் முன் ஹைதெராபாத் பகுதியில் இரு மாநில மக்களுக்கு இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டிருந்தது.

இன்று சந்திர சேகர ராவ் என்னும் தெலுங்கானா முதலமைச்சர் அரசு செலவில் ஏழுமலையானுக்குக் காணிக்கை செலுத்த இருப்பதான செய்தி கிடைத்தது. அவர் ஏற்கனவே யாகம் அரசு நிகழ்ச்சியாகச் செய்தவர்.

தமிழ் நாட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கவே முடியாது. அதுவும் உருது பேசும் இஸ்லாமியர் கணிசமான தெலுங்கானாவில் அவர்கள் தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பே இல்லை.

எனவே இனம் மதம் மொழி தாண்டி பொருளாதார மற்றும் பூகோள அடிப்படையிலான அடையாளமே தெலுங்கானா மக்களிடையே வேரூன்றி இருக்கிறது.

மொழி அடிப்படையில்  இரு  மாநிலப் பிரிவுக்கு முன்பும்  ஆந்திர மக்கள் என்றுமே இணைந்ததில்லை. தமிழ் நாட்டிலும் இதே தான். மொழி அடிப்படையில் ஓன்று பட்டதில்லை.

”இந்தி திணிப்பு ‘அல்லது ‘ஜல்லிக்கட்டு மறுப்பு ‘ இவற்றை எதிர்த்தது மொழிப் பற்றால் அல்ல. இந்த மாநிலம் நசிந்து விடுமோ என்னும் கவலையும் மான உணர்வுமே. அப்படி மொழி அடிப்படையில் ஓன்று படும் தன்மை இருந்திருந்தால் இலங்கைக்கு ஆயுதம் ஏந்த ஏகப் பட்ட பேர் போயிருப்பார்கள். இன்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாடும் எத்தனையோ தமிழர்களுக்காக எழுந்த போராட்டம் ஏதுமில்லை. மாநில உணர்வு தெலுங்கானா போல இங்கும் உண்டு. அவ்வளவே.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இணையாக ஜாதி வெறி மிகுந்ததே தமிழ் நாடு. மொழி அடிப்படையில் ஓன்று பட்டிருந்தால் ஆணவக் கொலைகள் மற்றும் தீண்டாமை இன்றும் கோலோச்சும் அவலம் இருக்காது.

மாநில அடிப்படையில் ஓன்று பட்டு ஆங்கில மோகம் கலையாது இருக்கும் தமிழ்ப் பின்னணி புரியாமல், மொழி அடிப்படையில் இனி எல்லாம் நடக்கும் என்று நம்பி நாடி நரம்பு முறுக்கேறத் தேவையில்லை.

பல சிறு நகரங்களிலும் ‘மத்தியக் கல்வித் திட்டத்தின்’ கீழான பள்ளிகள் பெருகி வருகின்றன. ஹிந்தி கற்பதில் ஈடுபட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மறு பக்கம் தனது மாநிலம் ஏய்க்கப் படுகிறது என்னும் எண்ணமும் வலுத்து வருகிறது. இந்த ஆதங்கம் தனது மக்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்யும் முனைப்பில் முடிவதே தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

எந்த சிறிய பெரிய நிலப்பரப்பு மக்களும் சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இவற்றால் மட்டுமே மேம்பட முடியும். மேம்படும் வழி அது மட்டுமே.

தமிழ்ப் பண்பாடு எனப் பொதுமைப் படுத்த முடியாத குறை நிறைகள் இங்கும் பிற மாநிலங்களிலும் உண்டு.

மனித நேயம் எல்லாப் பண்பாடுகளிலும் குறைவாகவே தென்படுகிறது. கருத்துக் சுதந்திரத்துக்கான வாசல் எந்தப் பண்பாட்டிலும் திறக்கப் படவே இல்லை.

மானுடம் தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ளும் கட்டாயம் முன்னெப்போதையும் விட இப்போது இருக்கிறது. இந்தியாவிலும் உலக அளவிலும்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

One Response to தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்

  1. வேகநரி says:

    //இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இணையாக ஜாதி வெறி மிகுந்ததே தமிழ் நாடு. மொழி அடிப்படையில் ஓன்று பட்டிருந்தால் ஆணவக் கொலைகள் மற்றும் தீண்டாமை இன்றும் கோலோச்சும் அவலம் இருக்காது.மாநில அடிப்படையில் ஓன்று பட்டு ஆங்கில மோகம் கலையாது இருக்கும் தமிழ்ப் பின்னணி புரியாமல் மொழி அடிப்படையில் இனி எல்லாம் நடக்கும் என்று நம்பி நாடி நரம்பு முறுக்கேறத் தேவையில்லை.//

    உங்க கருத்தை முழுமையாக ஏற்று கொள்கிறேன். தமிழர்களுக்கு தமிழ் என்றாலே இஷ்டமில்லை ஆங்கிலத்தில் தான் அதிக கவர்ச்சி.
    //தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு..//
    மாட்டோடு சண்டை போட வேண்டும் என்று போராடியவர்களை போராளிகள் என்று நீங்க சொன்னதை ஏற்கமுடியவில்லை.
    //கருத்துக் சுதந்திரத்துக்கான வாசல் எந்தப் பண்பாட்டிலும் திறக்கப் படவே இல்லை.//
    கருத்துக் சுதந்திரத்தை அனுமதிக்காத நிலையில் இருப்போர்களில் ,முன்னணியில் உள்ளவர்களில் தமிழினமும் அடங்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s