அவமானமான ஆறாம் இடம் – தினமணி தலையங்கம்
யுனிசெப் அறிக்கைப் படி நாம் பிறந்த சிசுக்கள் மரிப்பதில் தெற்கு ஆசியாவில் உள்ள எட்டு நாடுகளில், சிசு மரண எண்ணிக்கை விகிதத்தில் ஆறாம் இடத்தில் இருக்கிறோம்.
மருத்துவப் பட்டப் படிப்புக்கு எவ்வளவு போட்டி ? சிறு பெரு நகரங்களில் எத்தனை மருத்துவர்கள் ? எத்தனை மருத்துவ மனைகள் ? ஆனால் கிராமங்களில் மருத்துவ உதவி எட்டாக்கனி தான். நமக்கு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடந்தால் போதும். பண்பாடு பாதுகாக்கப் பட்டால் போதும். குழந்தைகள் எத்தனை பறி போனால் நமக்கென்ன?
உலக நாடுகளுடன் போட்டி போடுவதில் நாம் முதலில் கல்வி, சுகாதாரம் , தாய் செய் நலம் பேணும் இடங்களில் முன்னேற வேண்டும். விவசாயி , கிராம நலம், கிராமப் புற வேலை வாய்ப்பு என வாய் கிழியும் எல்லா அரசியல்வாதியும் முதலில் கிராமப்புற கர்பிணித் தாய் சேய் நலம் பேண மருத்துவ மாணவர் மற்றும் பட்டம் பெற்ற மருத்துவருக்கு கிராம சேவையைக் கட்டாயமாக்க வேண்டும். நகர்ப்புற தனியார் மருத்துவமனைகளுக்கு எத்தனை ஏழைத் தாய் வந்தாலும் சேவை செய்வது கட்டாயம் என நிறுவ வேண்டும்.
கிராமங்கள் அதன் கோடிக்கணக்கான ஏழைகளுக்குப் பயனில்லாத எந்த செயற்பாடும் கொண்டாட்டமும் மனசாட்சி இல்லாத ஒன்றே. நாம் முதலில் கிராமத்தை வளர்த்துப் பின் தலை நிமிர்வதே சரியான பெருமிதம்.
தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ——–> இது.
(image courtesy:orissadiary.com)