காவல் துறையின் நிலை ஜல்லிக்கட்டு முடிவில்- தமிழ் ஹிந்து தலையங்கம்
காவல் துறை மீதான விமர்சனகளுக்கு முடிவு இருக்க வாய்ப்பில்லை. அவை ஆதாரம் உள்ளவையே. ஜல்லிக்கட்டு முடிவில் இரண்டு எதிர் நிலைகள் இருந்தன. ஓன்று மாணவர் நடுவே வன்முறை மற்றும் ஜனநாயக விரோதம் வழிமுறையாகக் கொண்டோரின் ஊடுருவல் ; மறுபக்கம் காவல் துறைக்குத் தலையான வேலையான இந்த சிக்கலை முடிப்பது.
பின் நடந்தவை கசப்பானவை. விசாரணைக்கு உரியவை. மீண்டும் நடக்கக் கூடாதவை. அதிகாரம் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய படிப்பினைகளைத் தரப்பு போகிறவை.
காவல் துறை தமது பணியில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்கள் மீது உள்ள இறுக்கமான நெறி முறைகள் மற்றும் கட்டாயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு முறை விடியற்காலை மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். உஸ்மான் சாலையில் பெண் போலீஸ் ஆன் போலீஸ் என நான்கைந்து பேர் ஒரே இடத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் அதிகாலையில் என்ன செய்கிறார்கள் என கவனித்தேன். ஒரு பிணத்துக்குக் காவலாய் நின்றிருந்தார்கள். அவர்கள் பணி செய்யும் ஒவ்வொரு நாளும் எப்படி முடியும் என்பது நிச்சயமில்லை. பணிக்காலம் முடிந்து நிம்மதியை பணி ஓய்வு பெறுவது பெரிய சவால்.
அவர்கள் பணியைச் செய்ய மக்களின் ஒத்துழைப்பு மட்டுமே ஆதரவு. அவர்களின் அத்துமீறல் கண்டனத்துக்கு உரியது. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அவர்கள் அச்சமும் நிச்சயமின்மையும் கட்டாயங்களுமான கயிறுகள் ஆட்டிவைக்கும் பொம்மைகள்.
இதை நடுநிலையாய் எடுத்துச் சொல்லும் தமிழ் ஹிந்து தலையங்கத்துக்கான இணைப்பு —————–> இது.
(image courtesy:dnaindia.com)