விவசாய சாதனையாளர் பூங்கோதை – தமிழ் ஹிந்து கட்டுரை
இயற்கை விவசாயம் செய்து சாகுபடியில் சாதனை செய்த பூங்கோதை விவசாயிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமானவர்.
அவரது ஊரான வேப்பந்தட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் வருவது. பெரம்பலூர் துறையூர் இரண்டுமே தண்ணீர் பஞ்சத்துக்குப் பெயர் போனவை. இதில் மக்காச் சோளம் சாதனை அளவு அவர் பயிரிட்டிருப்பதும் தனி ஒரு பெண்ணாக விவசாயம் பார்ப்பதும் பெரிய சவால்களை சமாளித்ததாலேயே.
விவசாயிகள் லாபம் பார்ப்பது என்பது அபூர்வமே. அவர்களுக்கு தமது மண் மீதும் விவசாயம் என்னும் தொழிலின் மீதும் உள்ள பற்று மிகவும் அதிகம். அதுவே அவர்கள் பல வருடம் பஞ்சமான பின்பும் தமது பணியைத் தொடரக் காரணம். அவர்களது அர்ப்பணிப்பு அபூர்வமாகவே பிற தொழில்களில் காணக் கூடியது. பூங்கோதை இந்த அர்ப்பணிப்பின் சிறந்த உதாரணம்.
தமிழ் ஹிந்து கட்டுரைக்கான இணைப்பு ——————> இது.
(image courtesy:tamil.thehindu.com)