‘நீட்’ நுழைவுத் தேர்வு மற்றும் தமிழ் மாணவர் கல்வி நிலை – நீதிபதி சந்துரு கட்டுரை
‘நீட்’ நுழைவுத் தேர்வு என்னும் போட்டித் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை’ என்னும் தொனியில் அரசியல் கட்சிகளும் மாநில அரசும் ஒரே அணியாக நுழைவுத் தேர்வை எதிர்க்கிறார்கள். அவர்கள் தரப்பில் ‘இது இட ஒதுக்கீட்டுக்கு இந்த மாநிலத்தில் சிக்கல் உருவாக்கும் என்பது. தமிழ் ஹிந்துவில் தமது கட்டுரையில் நீதிபதி சந்துரு இது இட ஒதுக்கீட்டை பாதிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறார். நமது மாநில மாணவர் கல்வித் தரம் மிகவும் கவலை அளிக்கும் படி இருக்கிறது என்பதும் அவர் எடுத்துக் காட்டும் பகுதிகள் இவை :
—————————————-
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 – 80.23%; 2013 – 84.44%; 2014 – 87.71%; 2015 – 90.06%; 2016 – 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.
———————
சென்னைப் பள்ளியொன்றில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், தமிழ், மற்றும் ஆங்கிலப் பாடங்களில் சமீபத்தில் திறனறிச் சோதனைகள் மேற்கொண்டதில், பெரும்பான்மையான மாணவர்களுக்குக் கணிதத்தில் இரண்டு இலக்கங்களுக்கு மேல் கணக்குகள் போட முடியவில்லை. ஆங்கிலத்தில் அகரமுதலியும், தமிழ் மொழிகளில் உயிர் மெய் எழுத்துகள் முழுமையாகவும் அறிந்திருக்கவில்லை என்ற உண்மையை அறிய முடிந்தது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் இதுதான் நிலைமை.
——————
இந்தக் கட்டுரையில் அவர் மையப்படுத்தும் கவலை முக்கியமானது. மத்திய அரசின் சிபிஎஸ் சி எனப்படும் கல்வித் திட்டத்துக்கு மிகவும் பின்தங்கிய ஒரு கல்வியே மாநிலத் திட்டத்தில் இருக்கிறது. ஒரு தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு ஆலோசனை ஒரு ஆசிரியர் வழங்கும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் அவர் ‘ வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்து எழுதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்கும் – இது சிபிஎஸ் சி பள்ளியிலிருந்து மாநிலக் கல்வித் திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்குப் புரிவதே இல்லை ‘ என்று குறிப்பிட்டார். பல மாணவர்களால் தொழில் நுட்பக் கல்வியை கல்லூரியில் உள்வாங்க முடிவதே இல்லை. அடித்தளம் பலவீனமான பள்ளிக் கல்வி என்பதே காரணம்.
நுழைவுத் தேர்வுகளை வெல்லும் அளவுக்கான கல்வித் திட்டமும் பயிற்சியும் மட்டுமே மாணவர்களை எந்த மாநிலம் எந்த நாடு என்றாலும் மேற்படிப்போ வேலையோ செய்து மேம்பட உதவும்.
ஒரு தாழ்வு மனப்பான்மை நிலையைத் தக்க வைக்க எல்லா அரசியல்வாதிகளும் கை கோர்ப்பது வெளிப்படை.
அவரது முழுக் கட்டுரைக்கான இணைப்பு ————–> இது.