‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண்
சிறு பத்திரிக்கைகள் என அழைக்கப்படும் இலக்கிய இதழ்கள் மிகவும் குறைவான பிரதிகள் வழி தீவிர இலக்கியத்தை வளர்த்தன. இப்போதும் சில சிறு பத்திரிக்கைகள் இயங்குகின்றன. இடமின்மை மற்றும் அரசியல் சார்பும் தனி ஆளுமையின் தாக்கமும் இந்த இதழ்களில் உண்டு. ஒரு அளவுக்கு சில இணையங்கள் இதே பணியை நாடு நிலையுடன் செய்து வருவது நம்பிக்கை தருவது. இணைய எழுத்தை இலக்கியமாக ஏற்க மனத்தடை உள்ள மூத்த எழுத்தாளர்கள் பலர்.
சிறு பத்திரிகைகள் இணையம் இரண்டுமே என் அணுகுமுறையில் ஒன்றே. என்னிடம் மனத்தடை ஏதுமில்லை.
பிரதிலிபியில் வெளியாகி உள்ள எனது ‘ஒரு பிடி மண்’ சிறுகதைக்கான இணைப்பு ———- இது.
(image courtesy:nature.com)