தமிழகத்துக்கு விடிவு உண்டா?


Image result for vksasikala and panneerselvam and stalin images in same frame

தமிழகத்துக்கு விடிவு உண்டா?

வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள ஆட்சி மாற வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயமாக மையப் படுத்தப் படுகிறது. மக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள்.

அதிமுக பற்றிய குற்றச்சாட்டுக்களை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை. மாற்று திமுக மட்டுமே. ராஜா என்னும் அமைச்சர் மீது இன்னும் தீர்ப்பு வராத லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்னும் குற்றச்சாட்டு நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவரைக் கட்சி இன்று வரை அரவணைக்கிறது.

2012 மற்றும் 2013 ல் அண்ணா ஹசாரே அரசு ஊழியர்களை நிர்வாகத் தலையீடு இன்று ஊழல் மீது நீதி மன்றம் விசாரிக்கும் ‘லோக் பால்’ மசோதாவுக்காகப் போராடினர். அதில் வென்றார். அவரது போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்கப் பயன்படுத்தி அரவிந்த் கேஜிரிவால் என்னும் அவர் சீடர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவரது கட்சியில் பலர் மீதும் இன்றும் நீடிக்கின்றன.

காசு வாங்கிக் கொண்டு ஒட்டுப் போடும் ஜனம், காசு கொடுத்தால் மட்டுமே கட்சிப் பணி செய்யும் கூட்டம் இவர்கள் ஊழல் இல்லாத அரசியலை என்றுமே
நடக்காத ஒன்றாகச் செய்வார்கள்.

அரசியல் வழியாக ஊழலில்லாத ஆட்சி சாத்தியமே இல்லை. மக்களின் விழிப்புணர்வு மட்டுமே அதைக் கட்டுப்படுத்தும்.

தமிழ் நாடோ வேறு மாநிலமோ ஊழலின் அளவு வேறுபடலாம். அவ்வளவே.

ஊழல் ஒழிப்பு அகில இந்தியப் பிரச்சனை. அதை தமிழ் நாடு தனித்துத் தீர்க்க இயலாது தான்.

ஒரு ஆட்சி மாறினால் ஊழல் செய்யும் கட்சி மாறும். அளவு மாறலாம். ஆனால் விடிவு கிடையாது.

தமிழகத்துக்கு விடிவு வேறு சில முக்கியப் பிரச்சனைகளில் சாத்தியம். ஆனால் அது அரசியல்வாதிகளுக்கு வெளியே மட்டுமே சாத்தியம்.

விவசாய மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு எந்த அண்டை மாநிலமும் உதவிப் போவதில்லை. சொட்டு நீர்ப் பாசனம் , கடல் நீரைக் குடிநீராக்குதல் இவை தாற்காலிகத் தீர்வுகள். நதிகள் மத்திய அரசின் கைக்குப் போவதே நிரந்தரத் தீர்வு.

தமிழ் நாட்டின் தரமில்லாப் பாடத் திட்டம் மாணவர்கள் எந்தப் போட்டித் தேர்வுக்கும் தகுதி அற்றவராக அவர்களை ஆக்கி விடுகிறது. இதற்கானத் தீர்வு மக்களின் விழிப்புணர்வை ஊடகங்கள் தூண்டினால் மட்டுமே.

சுற்றுலா, கைவினைப் பொருட்கள் இவை வழி கிராமப்புற மக்களை ஓரளவு வறுமையிலிருந்து மீட்க இயலும்.

நெசவாளர் மற்றும் விவசாயிகளின் பொருட்களை இடைத் தரகர்களை நீக்கி நாம் வாங்கினால் அவர்கள் வாழ்வு வளம் பெறும்.

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இவை கவனம் பெறவே இல்லை. விழிப்புணர்வு வளரவும் இல்லை.

கல்வி, சுகாதாரம், சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி இவை மேம்படாத ஒரு வளர்ச்சி எந்த மாநிலத்துக்கும் சாத்தியமே இல்லை.

ஜல்லிக் கட்டு போன்ற பண்பாட்டு விஷயங்களில் காணும் எழுச்சி நீண்ட கால நிலைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதில் வெளிப்படும்போது மட்டுமே துவங்கு புள்ளி முன்னேற்றம் என்னும் பாதையில் அமையும்.

சமுதாயம் மாற வேண்டும் என்னும் கனவும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடும் முனைப்பும் விவாதங்கள் மற்றும் சுயவிமர்சனம் வழியே ஊடகங்களில் நிகழ வேண்டும்.

கருத்துக் சுதந்திரத்தின் வலிமை புரிந்த சமுதாயத்தில் மட்டுமே அது சாத்தியம்.

இன்று இவை கனவே. நாம் போக வேண்டிய தூரம் மிக மிகத் தொலைவு.

க போனால் ச என ஆட்சியாளர் மாறுவதால் எந்தப்பயனுமில்லை.

(image courtesy:firstpost.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to தமிழகத்துக்கு விடிவு உண்டா?

  1. வேகநரி says:

    //பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு இவை கவனம் பெறவே இல்லை. விழிப்புணர்வு வளரவும் இல்லை.
    ஜல்லிக் கட்டு போன்ற பண்பாட்டு விஷயங்களில் காணும் எழுச்சி //
    முதல் தரமான விழிப்புணர்வு பதிவு ஐயா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s