ஸ்டாலினை வாழ்த்துவோம்
பொன்னாடையும் பரிசுகளும் ஒரு அரசியல்வாதிக்குக் குவியும் வெறும் நாட்களிலே. அதுவும் பிறந்த நாள் என்றால் ? பரிசு மலை குவியும். இந்த வருடம் தமது பிறந்த நாளுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கும் படி ஸ்டாலின் தொண்டர்களை வேண்டினார். இது எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் வாசகர் என வாசிப்பின் மும்முனைகளுமே மகிழும் விஷயம். திமுக பற்றிய விமர்சனங்கள் எனக்குள் உண்டு. அது வேறு விஷயம். ஆனால் நூலகம் வழி புத்தகங்களை வாங்கி , ஆட்சிக் காலத்தில் புத்தக ஆசிரியர் மற்றும் பதிப்பாளர்களுக்கு அவர்கள் நிறையவே ஆதரவு தந்தவர்கள். நேர்மாறாக ஜெயலலிதா புத்தகங்கள் வாங்கவில்லை. திமுக எழுப்பிய உலகத்தரமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்காமல் சீரழிக்க முயன்றார். நீதி மன்றம் காப்பாற்றியது.
திருமணம் மற்றும் பிறந்த நாள் விழாக்களில் நல்ல நூல்களை எல்லோருமே பரிசளிக்கலாம். வாசிப்பு மற்றும் அதன் வழி சமூகத்தின் சிந்தனை இரண்டும் மேம்படும். ஸ்டாலினுக்கு நம் மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் இதே உத்தரவைப் போடுங்கள் ஸ்டாலின் !
(image courtesy: twitter)