அஞ்சலி – அசோகமித்திரன்
உடல் நலக்குறைவால் அசோகமித்திரன் காலமானார் என்னும் செய்தி மிகவும் சோகம் தருவது. பல நினைவுகள் என்னுள் மோதுகின்றன. சென்ற வருடம் ஒரு இலக்கிய அமர்வில் பனுவல் புத்தகக் கடையில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். இரண்டு மாடிகள் ஏறி வந்தார். மிகவும் இயல்பாக உரையாடினார். மீண்டும் ‘நவீன விருட்சம் ‘ நூறாவது இதழ் வெளியீட்டு விழாவில் அவரைச் சந்தித்தேன். தமக்கே இயல்பான அங்கதத்துடன் பல நினைவுகளை , பல வாசிப்புகளைப் பகிர்ந்தார். அவரை பாதித்த மாந்தர்களை , மனித உறவுகளின் அரிய தருணங்களைப் பகிரும் அவர் படைப்புக்களை வாசிக்கும் போது நம்மை எது பாதிக்கிறது என்பது நம் மனத்தின், கற்பனையின் வீச்சைப் பொருத்தது. நவீனத்துவத்தின் அடையாளம் வாசகனின் புரிதல் தூண்டப்படுவதே. நவீனத்துவம் அவரது கால கட்டத்தில் அவரால் புதிய பரிமாணம் பெற்றது.
அவரைப் பற்றிய எனது பதிவைப் பகிர்கிறேன். அதற்கான இணைப்பு ——-இது.
அவருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.