சாலை மறியல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்த்து விடுமா?
அநேகமாக ஒரு நாளில் நான்கைந்து இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. தனக்குப் பிடித்த நடிகரின் படப்பெட்டி வரவில்லை என்பது தொடங்கி தண்ணீர் லாரி வரவில்லை என்பது வரை. அந்தப் பகுதி சட்டம் ஒழுங்கு அதிகாரி வருவார். சம்பந்தப் பட்ட துறையின் அதிகாரியிடம் பேசுவார். பிறகு சமாதானப் பேச்சு வார்ததை. அவ்வளவே.
சில கேள்விகளை இந்தப் போராட்டத்தை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளே எழுப்புவதில்லை. முக்கியமான சில கேள்விகள் இவை :
1. பிரச்சனை உள்ளாட்சி அமைப்பு சார்ந்ததா அல்லது மாநில அரசின் துறை சார்ந்ததா அல்லது மத்திய அரசா?
2. உரிய அதிகாரிகள் எல்லா மட்டத்திலும் அணுகப் பட்டார்களா? என்ன தடை ? என்ன நடவடிக்கைக்கு அவர்கள் தயார்?
3.தகவல் அறியும் உரிமை பயன்பட்டதா? என்ன பதிலை அதில் தந்தார்கள் ? அதுவும் நேரில் தந்த பதிலும் ஓன்று தானா ?
இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே உண்மையில் எங்கே பொறுப்பின்மையும் அலட்சியமும் இருக்கிறது என்பது வெளியே வரும் .
தமிழகத்தின் பிரச்சனை அரசியல்வாதிகள் மக்களை தாழ்வுணர்ச்சியும் குறுகிய அணுகு முறையும் உள்ள அகதிகள் போல ஆக்கி விட்டதே.
மாற்று விவசாயம், விவசாயம் தவிர்த்த வருமானம், அகில இந்திய மாணவருடன் போட்டியிடும் அளவு மாணவர்கள் தயாராகும் கல்வித் திட்டம் இவை தான் தீர்வுகள். அரசியல் போராட்டங்களும் சாலை மறியலும் அதைத் தூண்டி விட்ட ஆட்களுக்கு தம்மை நிலைப் படுத்திக் கொல்லப் பயன்படும் அவ்வளவே.
மாநில மேம்பாடு ஊழலற்ற உள்ளாட்சி மற்றும் மாநில நிர்வாகம், கல்வி, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்பை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டது. நமது போக்குவரத்தை நாமே கெடுத்துக் கொள்வதால் முன்னேற்றம் அல்லது தீர்வு எதுவும் வராது.
(image courtesy:oneindia.com)
மிகவும் சரியாக சொன்னீர்கள்.தமிழக மக்களை அரசியல்வாதிகள், மிகவும் தாழ்வுணர்ச்சியும் குறுகிய மனபான்மை கொண்டவர்களாக மாற்றி, மந்தைகள் மாதிரி அவர்களை மேய்ப்பதற்கே முயற்ச்சிக்கிறார்கள்.