பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை


Image result for dravidian movement images

பிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை

சமஸ் கட்டுரைக்கான இணைப்பு————— இது.

5.4.2017 தமிழ் ஹிந்து இதழின் ‘அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?’சமஸ் கட்டுரையின் ஒரு பகுதி இது :
———————————————–
தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் மட்டும் அல்லாது, அதன் முக்கியமான ஆயுதங்களில் ஒன்றாகக் கையாளப்படக் கூடியது பிராமணச் சமூகம். இன்றைக்கெல்லாம் 2.5%-க்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள அவர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அளித்து, அரசியல்ரீதியாக அவர்களை உள்ளிழுப்பது நல்லெண்ணங்களை விதைப்பதாக மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அரசியல் பிரதிநிதிகளாகவும் திராவிடக் கட்சிகளைப் பகிரங்கப்படுத்தும் செயல்பாடாகவும் அமையும்.

————————————————–

திராவிடம் என்னும் நிலப்பரப்பைக் கையில் எடுத்து எந்த விதத்திலும் அதன் பூகோள எல்லைக்குள்ளோ அல்லது அதன் பண்பாட்டு ஒற்றுமை என்னும் அடிப்படையில் (தென் மாநிலங்கள்) எந்த விதத்திலும் தெளிவில்லாத திராவிடக் கட்சிகளை மக்கள் ஆளுமைகளின் அடிப்படையிலேயே – எம் ஜி ஆர்- கருணாநிதி- ஜெயலலிதா- ஆதரித்து வந்திருக்கிறார்கள். தமிழ் என்னும் மொழியில் பயிற்சி மற்றும் அகில இந்திய கல்வித்தரம் இந்த இரண்டிலுமே மிகவும் பின் தங்கிய ஒரு இளைய தலைமுறையை உருவாக்கியது முதல் தோல்வி; திராவிடக் கட்சிகளின் மிகப் பெரிய தோல்வி.

ஆளுமைகளைத் தாண்டி கொள்கை என ஓன்று திராவிடக் கட்சிகளிடம் இல்லை. எனவே மக்கள் இப்போதைக்கு ஆளுமைகள் மீது உள்ள பிடிமானம் காரணமாக ஒவ்வொரு கட்சிக்கும் மாற்றி மாற்றி ஓட்டளிக்கிறார்கள். அவ்வளவே .

சமஸ் மையப் படுத்தும் பிராமண நிராகரிப்பைப் பார்ப்போம். பெரியார் பிராமணர்களை ஒரு குறியீடாக எதிர்த்தார். பிரமணியமாக அவர் கண்டவை கீழே: (இன்றும் பிராமணர் மற்றும் மேல் சாதி மனப்பாங்கு இதுவே)

1.பிறப்பால் தான் உயர்ந்தவன் என்னும் அகந்தை.
2. சடங்குகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் மீது அபாரமான பிடிப்பு.
3.அதிகாரம் தன கையில் இருக்க வேண்டும்- பிறருக்கு அதற்கான தகுதி இல்லை- என்னும் செருக்கு.
4.தீண்டாமையை நியாயப் படுத்துவது.
5.கல்வி, மற்றும் கலைகள் மற்றும் அதிகாரம் இவை தாழ்த்தப்பட்டோரிடம் போகக் கூடாது என்னும் வெறி.
6. ஜாதி தாண்டிய திருமணத்தை எதிர்ப்பது.
7.வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துத் தன் மேலாதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்வது.
8. அரசியல் வாதிகளுடன் சுயநல உடன்பாடு.

பெரியார் ”பிராமணியம்’ என எவற்றைச் சுட்டிக் காட்டினாரோ அவை இப்போது மேல் ஜாதி அனைவரின் பொதுப் பண்பாய் இருப்பது மட்டுமே திராவிடக் கட்சிகளின் சாதனை. கலைகள் நாட்டுப்புறக் கலைகளோ அல்லது கர்நாடக சங்கீதமோ இவற்றை ஓரங்கட்டி கலைகள் இல்லாத வறட்டுச் சமூகமாய் மாற்றியது திராவிடக் கட்சிகளின் இரண்டாவது சறுக்கல்.

தலித் மற்றும் சிறுபான்மையினர் நோக்கி திராவிடக் கட்சிகள் நகர வேண்டும் என்பது கட்டுரையின் இரண்டாம் பகுதி. தலித்துக்களும் சிறுபான்மையினரும் மேல்சாதி மற்றும் இடை சாதிக் கட்சிகளாகவே திராவிடக் கட்சிகளைப் பார்க்கிறார்கள்.

தனிநபரின் வெறி மிகுந்த லட்சியமும் உழைப்பும் மட்டுமே தமிழ் நாட்டில் தலித் – ஏனையர் என இரு தரப்பிலிருந்தும் பல சாதனைகளுக்கு வழி கோலியது. இலக்கியம், கலை, ஊடகம் ஆகிய தளங்களில் ஜாதி பார்க்க்காமல் ஓன்று பட்டு சாதித்த பலரையும் நாம் காண்கிறோம்.

திராவிடக்கட்சிகள் காலாவதி ஆகிவிட்டது வெளிப்படையானது விரைவில் வெளிப்படையாய்த் தென்படும்.

மாற்று நோக்கி இளைஞர் நகரத் துவங்கி விட்டார்கள். சரியான தலைமை எழும் போது அது , தானே நடக்கும்.

(image courtesy:indianexpress.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s