மேற்கத்தியப் பெண்ணின் பார்வையில் இந்தியாவின் சிறப்புகள் -வாட்ஸ் அப் காணொளி
வாட்ஸ் அப் காணொளியில் ஒரு ஆங்கிலேயப் பெண் ஐரோப்பாவுடன் இந்தியாவை ஒப்பிடுகிறார். மக்களின் வாழ்க்கை எளிய ஆனால் வசதியான ஒன்றாய் இருக்கிறது எனவும், பயணிகளுக்கு ஏற்ற இடம் இந்தியா என்றும் அவர் தரும் பேட்டி கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சி தரும். மறுபக்கம் நாம் சுற்றுலாவுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தந்திருக்கிறோம் மற்றும் வெளி நாட்டுப் பயணிகளின் பாதுகாப்பில் எந்த அளவு கவனமாயிருக்கிறோம் என்னும் கேள்விகள் முக்கியமானவை. நாம் போக வேண்டியது பெருந்தொலைவு என்பதே விடை.