மருத்துவ சேவை வணிகமானது குறித்து ஜெயமோகன் பதிவு
‘நீயா நானா’ என விஜய் டிவி நடத்தும் உரையாடலில் மருத்துவரின் வணிக நோக்கு குறித்து வந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. ஆனால் சுமார் ஒரு வருடம் முன்பு இது போன்ற உரையாடலை நான் பார்த்ததாக நினைவு. ஜெயமோகனின் பதிவுக்கான இணைப்பு ————- இது.
ஜெயமோகன் குறிப்பாக ஒன்றை சுட்டிக் காட்டுகிறார். பிரச்சனை, புகார் என்று வந்தால் சேவை என்னும் கவசம் அவர்களுக்குத் தேவை. நாம் நிவாரணம் தேடித் போனால் பணம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது.
என் கருத்து இது. ஆய்வுக்கு கூடங்கள் மற்றும் மருந்து நிறுவனத்துடன் கூட்டு சேராத மருத்துவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கலாம். அவர்கள் பெரும்பான்மையாய் இருந்தால் நாம் நிம்மதி மூச்சு விடலாம். மறு பக்கம் அரசு ஆய்வுக் கூடங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து எந்த அளவு மருத்துவர்கள் வணிகமாயமாகி இருக்கிறார்கள் என மக்கள் அறியச் செய்யலாம்.