மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017
வி.எம்.கிரிஜா, பி. என். கோபாலகிருஷ்ணன், சிந்து கே.வி, உமா ராஜீவ் ,பிரமோத் .கே.எம், சந்தியா என் .பி ஆகிய சமகால மலையாளக் கவிஞர்களின் கவிதைகளின் மொழி பெயர்ப்பு நமக்கு ஏப்ரல் 2017 காலச்சுவடு இதழில் வாசிக்கக் கிடைக்கிறது.
அவற்றுக்கான இணைப்பு ——————— இது.
எந்த ஒரு நவீனப் படைப்பும் கற்பனை மிகுந்த வாசிப்பைத் தூண்டும். மனத்தடைகள் மற்றும் பழகிய பாதை வாசிப்பை விட்டு வாசகனை விலக்குமளவு வெற்றி காண்கிறது. கவிதைகளுக்கு இயல்பாகவே வாசகனின் கற்பனையைத் தூண்டும் வீச்சு உண்டு. அதைக் கவிஞர் உணரும் அளவு அவரது கவிதை வெற்றி காண்கிறது.
உமா ராஜீவின் கவிதையில் மட்டுமே அந்தப் பொறியை என்னால் காண முடிந்தது.
நீலப்படம் என்னும் கவிதையின் ஒரு பகுதி இது :
சுட்டிவைத்த ஒவ்வொரு நிலப்படத்திலும்
உலகம் பொதுவாக ஏற்றுக்கொண்ட
அடையாளங்கள் இருக்கின்றன
அடையாளம் சிதைந்த
எந்த நாடும் எந்த மக்களும்
நீடிப்பதில்லை என்பதன்
அடையாளத்தைத் தேடுகிறேன்
——————
அடையாளம் என்பது ஒருவர் சென்று அடைவதல்ல. அவர் மீது சுமத்தப் படுவதே. அது தட்டையான ஒரு புரிதலை முன் வைப்பது தனி நபர் அல்லது இனம் இரண்டுக்குமே பொருந்தும்.
நம் பரம்பரியத்தைக் கொண்டாட அந்த தட்டையான அணுகுமுறை போதும். அதை விமர்சித்து மேற்செல்ல இலக்கியம் மட்டுமே முயலும். அதுவே அந்தப் பணியை எப்போதும் நிறைவேற்றுவது.