மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை
தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதியிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு ———- இது.
ஐரோப்பாவில் நிறுவனமாக ஒற்றைக் கலாச்சாரம் என்னும் அடைப்புக்குள் மதம் காணப்பட்டது. அதே வழியில் ஹிந்துக்களும் இந்தியப் பெரும்பான்மைச் சிந்தனையும் போகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம்.
சமஸ் கட்டுரையில் முக்கியமான ஓன்று விடுபட்டுள்ளது. காந்தியடிகள் பற்றி குறிப்பிட்ட அவர் ஒன்றை விட்டு விட்டார். காந்தியடிகள் பெரும்பான்மை மக்களும் மதமும் சிறுபான்மையினரின் பாதுகாவலர் ஆகுமளவு , சுயகட்டுப்பாட்டுடன் இருக்கும் மதசகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பெரும்பான்மையினர் முன்னெடுப்பது பற்றி மிகவும் உறுதியாயிருந்தார். உண்மையில் அது விரிந்த மனப்பாங்கை முன் வைப்பது. இது இந்து கலாச்சாரத்தில் இயல்பாகவே இருப்பது. ஆனால் ஒட்டு வாங்கி அரசியல் காந்தியடிகளின் கனவை மலினமாக்கி மக்களை மத அடிப்படையில் பிரித்து ஓட்டுக் கணக்குப் போடும் கேவலத்தை முன்வைத்தது. இந்த ஒன்றே இன்று மத – கலாச்சார அடிப்படையில் மக்களை அரசியல்வாதிகள் பிரித்தாளும் நிலைக்கு நம்மைத் தள்ளியது.
மேற்குறிப்பிட்டது தெரிந்த ஓன்று தான். புதிதாக என்ன நாம் சிந்திக்க வேண்டும்? அரசியல்வாதிகளின் இந்த ஒட்டு வாங்கி உத்தியின் விஷத் தன்மையை உணர்ந்து தீர்க்கமாய் நீண்ட கால அடிப்படையில் சிந்தித்த சிறுபான்மை அல்லது இந்து சிந்தனைவாதிகள் ஒன்றாய் – நல்லிணக்கம் மட்டுமே மையமாய் – ஒரு தடத்தை உருவாக்கவே இல்லை.
சிந்திப்பது , சுயவிமர்சனம் செய்வது இவை நமக்கு அந்நியமாய் ஏன் இருக்கின்றன? நாம் ஏன் விவாதிப்பதே இல்லை ? இன்றைய தலைமுறை ஓர்ந்து விடை காண வேண்டிய கேள்விகள் இவை.
(image courtesy:pinterest.com)