197 நாடுகளின் புத்தகங்களைத் தேடி வாசிக்க விழையும் பாகிஸ்தான் சிறுமி
கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா என்னும் சிறுமி 197 நாடுகளின் ஒவ்வொரு நூலையெனும் வாசிக்கும் விருப்பத்தில் முக நூலில் ஒரு பக்கம் துவங்கி, பரிந்துரைகளைப் பெற்று அந்த நூல்களைத் தேடி வாசிக்கிறார். அவர் பயணம் இன்னும் வெகு தூரம் செல்வது. அவரது முக நூல் பதிவுக்கான இணைப்பு —–இது.
பல நாட்டு இன மக்களின் பண்பாடு அவர்கள் எதிர் கொண்ட சவால்கள் அவரது வாழ்க்கை முறை இவை யாவும் நமக்கு புத்தகங்களின் வாயிலாக மட்டுமே புரிந்து கொள்ளக் கிடைக்கும்.
புத்தகங்களை நேசிப்போர் வாழ்க்கையை நேசிப்போர். மற்ற குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணம் இந்தச் சிறுமி. அவரைப் பற்றிப் பகிர்ந்த தமிழ் ஹிந்து நாளிதழுக்கு நன்றி.