அமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ பற்றிய காணொளி
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சதுர மைல் அளவான அமெரிக்காவின் ‘எல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ‘ ஒரு சுற்றுச் சூழல் சமன் பற்றிய வெற்றிகரமான பரிசோதனையை நிகழ்த்தி உள்ளது என்பதே காணொளி. ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டது. படிப்படியாக பசுமை மற்றும் எல்லா உயிரினங்களும் அங்கே பெருகின என்பது இயற்கையின் சமன் பற்றிய ஒரு புரிதலை நமக்குத் தருகிறது. வேட்டையாடும் விலங்கு மற்றும் இரையாகும் விலங்கு இரண்டுமே சுற்றுச்சூழலின் சமனுக்கு அவசியமாய் இருக்கின்றன.
தற்செயலாக ‘மே 2017 தீராநதி ‘ இதழில் பீட்டர் ஒல்லெபன் எழுதிய ‘மரங்களின் அந்தரங்க வாழ்க்கை’ என்னும் நூல் பற்றி வாசித்தறிந்தேன். முதலில் ஜெர்மானிய மொழியில் 2015ல் எழுதப்பட்ட இந்த நூல் 32க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகி லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கிறது.
மணத்தை வெளிப்படுத்திடுவது வாயிலாக மரங்கள் சமிக்ஞை செய்கிறது. இலைகளாலும் கிளைகளாலும் அது தனது வாரிசுகளை அரவணைக்கிறது உட்பட்ட பல அறிய தகவல்கள் ஆதாரத்துடன் பீட்டர் புத்தகத்தில் இருக்கின்றன. இதன் ஒரு பிரதியை வாங்கும் ஆர்வம் நமக்கு அதிகரிக்கும்.
பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.