பெங்களூருவின் நிலை கவலைக்கிடமா ? – காணொளி
வாட்ஸ் ஆப்பில் வந்த இந்தக் காணொளி உண்மையில்லை என்றால் நான் மகிழ்வேன். இந்தப் பதிவை எடுத்து விட்டு அதை ‘தோட்ட நகரம்’ என நினைவு கூறுவேன்.
பெங்களூருவில் நச்சும் மாசும் மிகவும் அதிகரித்துள்ளதாக இந்தக் காணொளி கூறுகிறது. 80களில் நான் பெங்களூருவில் பல பகுதிகளில் நடந்தே சென்றிருக்கிறேன். பசுமையும் குளுமையும் எழிலுமாய் இருந்தது. இப்போது போக்குவரத்து நெரிசலுக்கு பயந்தே நான் அநேகமான வாய்ப்புக்களைத் தவிர்த்தேன். பெங்களூரு வாசிகள் யாராவது பதில் அளியுங்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது.
(கூகுள் செய்து இந்தக் காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தேன். ‘கார்டியன்’ என்னும் பத்திரிகையில் ஒரு கட்டுரை இதே தலைப்பில் வந்துள்ளது. அதற்கான இணைப்பு ————– இது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. )