+1க்கும் பொதுத் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் நன்மைகள்
பல பள்ளிகள் +1 பாடமே நடத்துவதே இல்லை. நேராக +2. கிளிப்பிள்ளைகளாக மனப்பாடம் செய்ய வைத்து , அடிப்படைப் பாடமான +1 பாடத் திட்டத்தைப் புறக்கணித்து விடுகிறார்கள் . நஷ்டம் யாருக்கு ? பாவப்பட்ட மாணவனுக்கு. பொறியியற்கல்வியின் முதலாண்டில் அவனால் துவக்கப் பாடங்களை புரிந்து கொண்டு பின்பற்றும் திறன் அவனிடம் இல்லை.
முதலாண்டில் மாணவர்களுக்கு ஒரு தேர்வு வைத்து +1 அளவு அவர்கள் அடிப்படை பலமாக இருக்கிறதா என சோதிக்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள். அதிர்ச்சி அவர்களுக்கும் மாணவருக்கும். பூஜ்யமாய் இருக்கிறார்கள் +2ல் பெரிய மதிப்பெண் பெற்ற மாணவ மணிகள்.
இதற்கு தீர்வு +1ல் பொதுத் தேர்வு வைப்பதே என அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரைத்திருக்கிறது. இதன் முக்கியமான நன்மை பொதுத் தேர்வு என்பதால் பள்ளியும் ஒழுங்காய் கற்றுக் கொடுக்கும். பரிட்சையும் சட்ட திட்டத்துடன் நடத்தப் படும். விரிவான செய்திக்கான இணைப்பு ————— இது.