தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி பற்றி ராகுல் திராவிட்
தோல்வியும் நிராகரிப்புமாய்த் துவளும் நேரத்தில் மனம் தளராமல் இருப்பது மிகவும் சவாலானது. அதே நேரம் தனது திறமைகளை மற்றும் சிறப்பியல்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நேரமாக தோல்வியால் தடை பட்டு தேங்கி நிற்கும் காலத்தை நாம் பயனாக்க முடியும் என்கிறார் திராவிட் . சீனத்து மூங்கில் துளிர் விடவே ஐந்தாண்டு ஆகும் . அதன் பின் அது கிடுகிடு என வளரும். காண்போருக்கு அது மண்ணுக்குள் உயிர்ப்புடன் இருந்த ஐந்தாண்டு பயனற்றதாய்த் தோன்றலாம். ஆனால் அதுவே பின்னர் அது வெகு வேகமாய் வளர அடிப்படையாய் அமைந்தது.
தனது வலிமைகளை, திறன்களை, உயிர்ப்பிக்கும் காலமாகவே நாம் தோல்வியில் துவளும் காலங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி . திராவிடின் உரை ஜெயிக்கும் உந்துதல் உள்ள யாருக்கும் உதவும்.