தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘
முத்துலிங்கமும் பல தமிழர்களும் ஒன்றிணைந்து உழைத்து லட்சிய வெறியுடன் நிதி சேர்த்து , ஆவணங்கள் ஒழுங்கு செய்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற்றுத்தந்த சாதனை என்றும் நன்றியுடன் நம்மால் நினைவு கூரப்படும்.
7000க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் நடுவே தமிழின் எந்த சிறப்பு இதைப் பெற்றுத்தந்தது என்பதை இந்தக் காணொளியில் நாம் காண்கிறோம். “வேறு எந்த மொழியையும் சார்ந்திராத தனித்தன்மை ” என்பது நாம் ஓர்ந்து உணர வேண்டிய ஓன்று. தமிழின் எந்த எழுத்து வடிவமோ ஒலியோ சொற்களின் பொருளோ பிற மொழி வழியாக புரிந்து கொள்ளக் கூடியவை ஆகா. தமிழ் வழியாகவே நாம் அவற்றை புரிந்து கொள்ள இயலும். இந்த உரைகளில் அநேக மொழிகள் தமிழ் அருகே வரவே முடியாது.
பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.