ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதையை ஆர். அபிலாஷ் பகிர்ந்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————— இது.
நவீனக் கவிதையின் செறிவு கவிதையில் வெளிப்படும் இடங்கள் கீழே :
1. முதலாவது தலைப்பு கவிதையின் முக்கிய அங்கமாயிருக்கிறது. நமது வாசிப்பின் திசையை அது வழி நடத்துகிறது. திரும்புதல் – எதை நோக்கித் திரும்புதல் ? கடந்த காலம் நோக்கியா ? அல்லது தன்னுள் பதிந்த ஆகச் சிறந்த மனித உறவு பற்றிய புரிதலை நோக்கியா?
2.காட்சிப்படுத்துதலில் இரண்டு நம் கவனத்துக்கு. ஓன்று அவன் கட்டிலுக்கு அடியே தேடுகிறான். அதாவது அவன் வீட்டுக்குள் வரும் போது அம்மா ஒளிந்து விளையாடுவாள். மற்றது அவன் 21 வயதில் தாயை இழந்தான் என்பது. 21 வயது என்ற காலத்தில் அவனும் அம்மாவும் மட்டுமே. மனையாள் என்று ஒருத்தி கிடையாது. அவளின் வருகையால் அம்மாவிடம் புதியதாய் நிகழும் மாற்றங்களும் நிகழ்த்தும் தாக்கம் ஏதும் இல்லாத நிலை அவனது.
3. திரும்புதல் என்பதை இரு பொருட் பட கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார். அவன் 60ல் இருந்து 20க்குத் திரும்புதல் மட்டுமல்ல. தனது பசுமைக் காலத்திலிருந்து பாலை எனும் நிஜத்தை நோக்கித் திரும்புவதும்.
பகிர்ந்த அபிலாஷுக்கு நன்றி.