கோயில் குளங்களைத் திமுக தூர்வாருவதை அரசியலாக்காதீர் – தினமணி
நீராதாரங்கள் பெரிதும் கோயில் குளங்கள். மதுராந்தகம் வடுவூர் போன்ற தளங்களில் ஏரி கோயிலை ஒட்டி இருப்பதைக் காணலாம். திமுக கோயில் குளங்களைத் தூர் வாருவது மிகவும் வரவேற்கத்தக்கது. எந்த ஒரு கட்சியும் விளம்பரத்துக்காகச் செய்யும் செலவை மக்களுக்கு நலப்பணி செய்யச் செலவிடாது. திமுக தமது பணம் மற்றும் தொடர் உழைப்பை இதற்காகப் பயன்படுத்தி நல்ல முன்னுதாரணம் செய்திருக்கிறார்கள். குளங்களைத் தூர்வாருவது நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி நீண்ட காலம் மக்களுக்குப் பயனளிக்கும் உருப்படியான வேலை. இதை திமுக துவங்கி உள்ளது மக்களுக்கு மிகுந்த பயன் தரும். மரம் நடுவதையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். இதை வைத்து அரசியல் விமர்சனம் வேண்டாம் என்னும் தினமணி தலையங்கம் சரியான பதிவு. திமுகவைப் பாராட்டுவோம். தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ————— இது.