புதிய கிரகத்துக்கு மாணவி சாஹித்தியின் பெயர் சூட்டப்படும் சாதனை
பெங்களூரு ஏரிகளில் நச்சு ரசாயனக் கழிவுகள் கலந்து , ஆபத்தான அளவு நீர்நிலைகள் மாசு பட்டுவிட்டன. சாஹித்தி பிங்கலி என்னும் பெங்களூருவின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உலக அளவில் நடந்த Intel International Science and Engineering Fair (ISEF) என்னும் கருத்தரங்கில் நீர் மாசை நீக்குவது பற்றிய “An Innovative Crowdsourcing Approach to Monitoring Freshwater Bodies” என்னும் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அவரது ஆய்வு அவருக்கு Earth and Environment Sciences என்னும் பிரிவில் உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்தது.
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான Lincoln Laboratory, Massachusetts Institute of Technology (MIT) என்னும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வருவது. அதுவே புதிய கோள்களின் பெயர்களை முடிவு செய்யும் உரிமை பெற்றது. அவரது ஆய்வுக்கட்டுரையின் விஞ்ஞான பூர்வமான மாசு நீக்கும் வழிமுறைகளை அங்கீகரிக்கும் விதமாக அடுத்தது கண்டறியப்படும் புதிய கோளுக்கு அவரது பெயரைச் சூட்டும் கவுரவத்தை அவருக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த இளைஞரின் உழைப்பு, விஞ்ஞானத்தில் அவரது அர்ப்பணிப்பு இவை போற்றுதற்குரியவை. வாழ்த்துகள்.
விரிவான செய்திக்கான இணைப்பு ———————–இது.
(image courtesy: yourstory.com)