தனியே செல்லும் பெண்கள் பாதுகாப்புப் பற்றிப் பரவிய தவறான செய்தி – தினமணி
இந்த எண்ணுக்கு எஸ் எம் எஸ் செய்தால் தனியே போகும் பெண்கள் செல்லும் இடங்கள் ஜி பி எஸ் மூலமாகக் கண்காணிக்கப்படும். காவல் துறை இதைச் செய்யப் போவதாய்ப் பல தோழிகள் பகிர்ந்தார்கள் . இது ஒரு உதாரணத்துக்குத் தவறான செய்தி என தினமணி சுட்டிக் காட்டி, சமூக வலைத் தளங்களில் வருபவை அனைத்தும் உண்மை அல்ல என , நமக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது.
செய்திக்கான இணைப்பு —————– இது.
நாம் ஒன்றை நம்புவதும், அல்லது சரியான விவரம் தேடுவதும் அடுத்த கட்டம். முதலில் நமக்கு வந்தவற்றைப் பகிரும் முன் கண்டிப்பாக சரிபார்ப்பது என்று முடிவு செய்து கொண்டால் போதும்.
பொன் மொழிகள் போன்றவற்றைப் பகிர்வதில் தவறில்லை. வதந்திக்கு நாம் ஒரு ஊடகமாகிவிடக் கூடாது.