காமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது ?- சுகி சிவம் உரை
சுகி சிவத்தின் இந்த உரையைக் கேளுங்கள். சற்றும் தயக்கமின்றி முடிவெடுக்க காமராஜருக்கு உள்ளே இருந்து வழி நடத்திய மாண்பு எது ? காந்தியடிகள் ஒரு முறை குறிப்பிட்டார் “சிக்கலான ஒரு முடிவெடுப்பதில் சிரமம் இருந்தால் ஒரே ஒரு உரைகல் போதும். நாம் எடுக்கும் முடிவு ஏழைக்குப் பயனளிக்குமா இல்லையா என்னும் கேள்விக்கான விடையில் தெளிவான முடிவு கிடைக்கும்” வாழ் நாள் முழுதும் இது காமராஜரின் அணுகுமுறையில் தென்பட்டது.
இங்கே நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அரசை நடத்துவது மட்டுமே இலக்கு என்றால் அதற்கு அதிகாரிகள் படை போதும். ஆனால் முடிவுகளில் அரசியல் வாதி மட்டுமே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய திசையில் சிந்தித்து அவர்களை வழி நடத்த முடியும். காமராஜரை தமது ஏழ்மையை மறவாத மாண்பும் , ஏழைகளைக் காக்கும் உறுதியும் வழி நடத்தின. 1962ல் இந்தியாவில் முதல் முதலில் மதிய உணவைத் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கினார் காமராஜர். 1982ல் எம்ஜிஆர் அதை விஸ்தரித்தார். பெண் சிசுக்களின் உயிரைக் காக்க ஜெயலலிதா முன்னெடுத்த ‘தொட்டில் குழந்தைகள்’ திட்டமும் நேயம் மிகுந்த அரசியல் வாதியின் திட்டமாகும். உள் கட்டமைப்பில் கருணாநிதி காட்டிய தொலை நோக்கு பாராட்டுக்குரியது.
தனி வாழ்வில்- பொது வாழ்வில் காமராஜரின் நேர்மை , எளிமை, கண்ணியம், தொண்டுள்ளம் பின்னர் யாரிடமும் தென்படவில்லை என்பதே வரலாறு.
பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.