நவோதயாப் பள்ளிகளை நிராகரிப்பதால் நட்டம் கிராம மாணவருக்கே
உயர்நீதி மன்றத்தில் நவோதயா பள்ளிகள் தமிழ் நாட்டுக்குள் தேவையே இல்லை என அரசு வாதிட்டு வருகிறது. வழக்கு விசாரணையில் இருக்கிறது. பொது நல மனுவில் அரசின் நிலைப்பாடு இது.
கிராமப்புற மாணவர் இலவச உறைவிடத்துடன் தரமான கல்வி பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நவோதயா பள்ளிகளின் சிறப்பு அது. இது பற்றிய விரிவான பதிவுக்கான இணைப்பு ———– இது.
ஹிந்தியும் கூடவே வரும் என்பதே தமிழக அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆங்கில மோகம் வளர்த்ததைத் தவிர்த்து இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்? ஹிந்தி திணிப்பு எதிர்க்கப்பட வேண்டியது. ஆனால் ஹிந்தி கற்பது மாணவருக்கு கெடுதல் செய்யாது. தமிழ்நாட்டுக்குள் ஹிந்தி தான் பயன்படுத்த வேண்டும் அல்லது தமிழ் நாட்டுப் பள்ளிகள் ஹிந்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்னும் நிலை இல்லை. என்றும் நடக்காது. அது நிச்சயம் . அந்த அளவு இதில் மக்கள் தெளிவாய் இருக்கிறார்கள். மறுபடி ஆங்கில மோகம் பற்றிப் பார்ப்போம். இது பற்றிய தினமணி தலையங்கம் அழுத்தந்திருத்தமானது. இணைப்பு —————– இது
தமிழ் நாட்டு மாணவர் எத்தனை மொழி, எத்தனை திறன், எத்தனை புதிய அறிவுத் தடங்கள் பெறுகிறார்களோ அத்தனை நன்மை தமிழ் நாட்டுக்குத் தான். ஒரு மாயையில் , ஒரு தாழ்வுணர்ச்சியில் , ஒரு குறுகிய வட்டத்தில் மக்கள் வாழ வேண்டும் என அரசியல்வாதிகள் முயன்று வென்றும் வருகிறார்கள். சோகம்.