மக்களின் மகிழ்ச்சி மிகு குடும்பம் என் இலக்கு – சந்திர பாபு நாயுடு உரை – காணொளி
மைக்ரோ சாஃட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் தமது இலக்குகளைப் பகிர்கிறார். மின்னணு மற்றும் இணையத் தொழில் நுட்பப் புரட்சி வழி மக்களுக்கு அவர் நல்ல நிர்வாகம், வேலை வாய்ப்புக்கள், மகிழ்ச்சியான குடும்பம் , உள்ளடக்கிய சமுதாயம் இவை யாவும் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்க வேண்டும் என்னும் முனைப்புடன் இருக்கிறார். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, உள் கட்டமைப்பு வசதி, தொழில் வளர்ச்சி என அவர் ஒரு மாநிலம் முன்னேறும் எல்லாவற்றையும் திட்டமிட்டிருக்கிறார். புள்ளி விவரங்களுடன் தாம் அதை அடைவோம் என வாதிடுகிறார். அவர் போல ஒரு மந்திரியைக் கூட நாம் பார்க்க முடியாது. முன்னுதாரணமான முதல் மந்திரி அவர். ஆந்திர மக்கள் அதிர்ஷ்டக் காரர்கள்.
பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.