ஹாங்க் காங் விமான நிலையத்தில் ஐந்து மணி நேரம் இடைவெளி உண்டு என்ற போது அலுப்பாயிருந்தது . ஆனால் காலைக் கடன்கள் மற்றும் ஒரு காபி மற்றும் பாதுகாப்புச் சோதனை இவற்றிற்கே அந்த ஐந்து மணி நேரம் சரியாயிருந்தது. ‘ஸ்டார் பக்ஸ்’ கடையை முதன் முதலில் ஹாங்க் காங் விமான நிலையத்தில் தான் நான் பயன் படுத்தினேன். அமெரிக்காவின் பல இடங்களில் ‘ஸ்டார் பக்ஸ்’ உண்டு. ‘வை -பை ‘ எனப்படும் இணைய இணைப்பு அந்தக் கடைகளில் உண்டு. பல மணி நேரம் ஒரே ஆள் அங்கே உட்கார்ந்து கொண்டு மடிக்கணினியைத் தட்டிக் கொண்டிருப்பார். யாரும் அவரைத் துரத்த மாட்டார்கள்.
நெசவு வேலைப்பாடுள்ள ஒரு துண்டை காட்சிக்கு ஹாங்க் காங் விமான நிலையத்தில் வைத்திருக்கிறார்கள்.
ஹாங்க் காங் விமான நிலயத்தை ஒட்டியுள்ள போக்குவரத்துப் பாலம்.
மலைகள் , கான்கிரீட் காடுகள் மற்றும் கடல் யாவும் ஒன்றாய்ச் சேர்ந்தது ஹாங்க் காங் .