சான் ஹோஸே அருகில் ‘கிரேட் அமெரிக்கா’ என்ற இடத்தில் உள்ள ஒரு ‘ பொழுதுபோக்குப் பூங்கா ‘ மற்றும் அதைச் சுற்றுயுள்ள இடங்களை ஒரு தங்குமிடத்த்தின் 12 மாடியில் இருந்து நான் எடுத்த புகைப்படம் இது. அநேகமாக கார் நிறுத்தவோ , சாலைகளில் வண்டிகள் விரையவோ எந்த பிரச்சனையும் இல்லை. பல முறை நானும் என் மகனும் விவாதித்தோம். நம் நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் – தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் – எந்த விதத்திலும் சர்வதேச தரத்துக்குக் குறைவானவையே இல்லை. ஆனால் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகம். நம் ஜனத்தொகை மிக அதிகம். எனவே நாம் இவ்வளவு தூரம் வந்திருப்பதே பெரிய விஷயம். ‘பாஸ்ட் டிராக் ‘ என்னும் ஒரு கைபேசி போல உள்ள கருவியை என் மகள் காரை ஓட்டும் போது என் மகன் முன் பக்கக் கண்ணாடி மீது வைத்துப் பிடித்தான். சுங்கச் சாவடியில் எங்கள் கார் கடந்த போது ஒரு சிறு மணி ஒலி வந்தது. சுங்க வாடகை வசூல் ஆகி விட்டது. இந்தத் தொழில் நுட்பம் இன்னும் சில மாதங்களில் நமக்கும் வர இருக்கிறது.