கலிபோர்னியா என் புகைப்படங்கள் -12
முதலில் இரண்டாம் புகைப்படம் பற்றிப் பார்க்கலாம். மலைக்கு மேலே ஒரு புகைப்படக்காரர் நம்மை புகைப்படம் எடுப்பார். பிறகு கீழே வந்த பிறகு அந்த பச்சை சட்டைப் பெண் அருகே இருக்கும் நான்கு பக்கமும் சட்டங்கள் உள்ள அலமாரியில் நாம் நமது புகைப் படத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். மூன்று புகைப்படத்துக்கு 20 டாலர் அதற்கு மேல் ஒவ்வொரு பிரதிக்கும் பத்து டாலர்.
மற்ற இரண்டும் அமெரிக்காவில் ஊழியராயிருப்போர் நம்மிடம் காட்டும் நட்பு முறையான அணுகுமுறை. உபர் டாக்ஸி ஓட்டுநராகட்டும் அல்லது சுற்றுலாஸ்தல ஒழுங்கு செய்யும் ஊழியராகட்டும்; அவர்களது நட்பு முறை நம் மனம் சோர்ந்திருந்தாலும் தூக்கி நிறுத்துவது.
ஊழியர் மட்டுமல்ல. நடைபாதையில் நாம் கடந்து செல்லும் அறிமுகமில்லாத நபர் கூட குட் மார்னிங் சொல்லுவார். வாழ்த்துவார். பல அலுவலகங்களில் சக ஊழியருடன் பேசாத ஆட்களை நாம் இந்தியாவில் பார்க்கலாம்.
நல்ல மனித உறவுகள் நல்ல வாழ்க்கை அனுபவத்தை உருவாக்குகின்றன.