கலிபோர்னியா என் புகைப்படங்கள் -11
டொஹோ ஏரி 6000 அடி உயரமானது. மேலும் 3000 அடி உயர மலை அதை ஒட்டிய பகுதியில் உள்ளது. இது ஸ்கீயிங் எனப்படும் குளிர்கால பனிச்சறுக்கு விளையாட்டுக்குப் புகழ் பெற்றது. உச்ச வெயிற்காலம் இது. இன்னும் பனி உறைந்த பகுதிகள் இருக்கின்றன. குளிர் நாட்களில் 500 அங்குலம் பனிப்பொழிவு பெரும் மலை இது.
ஒன்றைக் குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். திருமணமான கையுடன் இரு பக்கப் பெற்றோர் மற்றும் பிற உறவினருடன் தேன் நிலவு செல்லும் என் மகள் மற்றும் மருமகன் அதிசயப் பிறவிகள். இங்கிதமில்லாமல் உடனே நீ ஏன் கூட சென்றாய் என ஆரம்பித்து விடாதீர்கள். அவர்கள் திருமணம் தேன் நிலவு இரண்டுமே அவர்கள் விருப்பப்படி பெற்றோர் நடத்திக் கொடுத்தது . கடக்கவே முடியாத சமூக வேறுபாடுகளை நாங்கள் கடந்து இதை அமெரிக்காவில் நடத்தினோம். இளைஞர்கள் நம்மால் யூகிக்கவே முடியாத சாத்தியங்கள் உள்ளவர்கள்.