கலிபோர்னியா என் புகைப்படங்கள் -13
‘ஹோம் லெஸ் ‘ என்று அழைக்கப்படும் வீடற்றவர்கள் பலரை சன்னிவேல், சான் பிரான்சிஸ்கோ, சாக்ரமென்டோ எல்லா நகரங்களிலும் பார்த்தேன். கோல்டன் கேட் பாலம் அருகே ‘பைசா போடுங்கள் ‘ என ஆங்கிலத்தில் பதாகை வைத்திருந்த பிச்சைக்காரர்களை பார்த்தேன். ஆனால் இவர்கள் எண்ணிக்கை குறைவே.
இந்தியாவில் இப்போது என்ன அதிகரித்து வருகிறதோ அது ஏற்கனவே இங்கே உள்ளதே. என்ன அது? அமெரிக்காவில் பிச்சைக்காரர்கள் அதிகம் இல்லையே ஒழிய எளிய ,வருமானத்தில் வாழ்வோர் மிக அதிகம். திருமணத்துக்கு முன்பு உறவினர் நிறைய வரவே , சாப்பாடு தயாரிக்கும் தென்னிந்தியர் ஒருவரை அணுகினார் என் மகள். அவரும் சமைத்துக் கொடுத்தார். அவர் இங்கே ஆராய்ச்சி செய்யும் விரிவுரையாளர். என் வயது.
உபர் ஓட்டுபவர்கள் அல்லது எடுபிடிகள் இவர்களில் பெரும்பான்மை தென்னமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சீனா , கொரியா பின்னணி உள்ளவர்கள். அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் சிறு நகரங்களில் பண்ணை போன்றவற்றை வைத்துப் பிழைப்பது சகஜம்.
உயர் வருவாய் மற்றும் வருவாய்க் குறைவு இடைவெளி மிக அதிகம். இதை நாமும் பின்பற்றி வளர்ச்சி என்று கொண்டாடுகிறோம்.
அமெரிக்காவில் வீடற்றவர்கள் குப்பைகளைத் தோண்டி உணவு அல்லது பொருட்களை சேகரிப்பதை நாம் காணலாம். உள்ளடக்கிய சமுதாயம் அமெரிக்காவில் உருவாகவே இல்லை. வாய்ப்பும் இல்லை.