கலிபோர்னியா என் புகைப்படங்கள் -14
படத்தில் நாம் காண்பது வாகன நிறுத்தத்தில் நுழையும் போதே , ஒரு மின்னணுக் கருவியில் என் மகள் தமது தொலை பேசி எண்ணைப் பதிவு செய்கிறார். வெளியேறும் போது மறுபடி பதிவு செய்தால் போதும். ‘ஆன் லைனில் ‘ பைசா வசூல் ஆகி விடும். நம் மால்களில் இது விரைவில் வர வேண்டும். கால் மணி அரை மணி காத்திருந்தே நாம் வெளியே வருகிறோம்.
இது பற்றி விவாதிக்கும் போது இங்கே மனித உழைப்பைக் குறைக்கிறார்கள் என என் மகன் மகள் இருவருமே எண்ணம் கொண்டார்கள். உண்மைதான். மறுபக்கம் எங்கே ஆட்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதில் இங்கே நல்ல தெளிவும் இருக்கிறது. சுற்றுலாத் தலங்களில் வழி காட்டவோ அல்லது ஒழுங்கு படுத்தவோ யாருமே இருக்க மாட்டார்கள் இந்தியாவில். இங்கே நூறு பயணிகளுக்கு ஒருவர் என்னுமளவு பெரிய எண்ணிக்கையில் சுற்றுலாத் தளங்களில் ஆட்கள் வேலை செய்கிறார்கள். சுற்றுலா மற்றும் பராமரிப்புத் துறைகளில் இங்கே ஆட்கள் அதிகம். பராமரிப்பு என நான் குறிப்பிடுவது ஒரு வளாகம் என்றால் அங்கே பொதுவான துவைக்கும் இயந்திரங்கள் மற்றும் உடற்பயிற்சி எந்திரங்கள் உண்டு. எல்லா இடங்களிலும் காகிதச் சுருள்களை இட்டு நிரப்பவே ஏகப்பட்ட ஆட்கள் தேவைப்படுவர். காகிதங்களை வைத்தே எல்லா சுத்தமும்.
இந்தியாவில் எங்கே ஆள் வேண்டுமோ அங்கேயெல்லாம் வைத்தால் வேலை வாய்ப்பும் அதிகமாகும். வாழ்க்கைத் தரமும் மேம்படும்.