கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 15
அமெரிக்காவில் எரிசக்தியை உற்பத்தி செய்ய எல்லா வாய்ப்பும் உண்டு. வளமும் உண்டு. அணைக்கட்டுகளில் உற்பத்தியாகும் நீர் மின்சக்தி, அணு உலை, எரிபொருள் வழி மின்சாரம் என எதற்கும் இங்கே பஞ்சமில்லை. இருந்தாலும் காற்றாலை வைக்க ஏற்ற இடங்களில் பெரிய அளவில் நிறுவுகிறார். சாக்ரமென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ வரையான மலைப் பகுதியில் மரங்கள் இல்லை. காற்றின் வேகம் அதிகம். எனவே நிறையவே அமைத்திருக்கிறார்கள்.
மின்சக்தியை இவர் எப்படியும் நிறையவே பயன்படுத்தும் தட்ப வெட்பம். வீடுகளில் மின் அடுப்பே. மாசில்லாத காற்றாலை மின்சாரத்தை இவர்கள் உற்பத்தி செய்வது விழிப்புணர்வைக் காட்டுகிறது.
மாசு என்றதும் ஓன்று நினைவுக்கு வருகிறது. பேரூந்துக்காகக் காத்திருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு ஆச்சரியம் மறுபடி மறுபடி வரும். வாகனங்கள் ஒன்றில் இருந்தும் புகை வரவே இல்லை. ஆளைக் கலங்க அடிக்கும் கரியமில வாயு நெடியும் இல்லை. மிகவும் கடுமையான சட்டம் மாசுக் கட்டுப்பாட்டில்.